Top
undefined
Begin typing your search above and press return to search.

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நியதிக்கு எதிரானது : விளாசிய பசுமை தீர்ப்பாயம் - மேல் முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நியதிக்கு எதிரானது : விளாசிய பசுமை தீர்ப்பாயம் - மேல் முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  15 Dec 2018 8:54 AM GMT

தூத்துக்குடியில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டம் கடந்த மே 22ஆம் தேதி வன்முறையாக வெடித்தது. இதனை தொடர்ந்து போலீசார் வன்முறையை கட்டுப்படுத்த நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் போராட்டக்காரர்கள் 13 பேர் பலியாகினர்.
தொடர்ந்து பதற்றம் நீடித்த நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று ஆலையை மூட அரசாணை வெளியானது. இந்நிலையில், தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நியதிக்கு எதிரானது என்றும் ஆலையை திறக்கலாம் என்றும் மேகாலயா மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு, தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வில் அறிக்கை அளித்தது.
இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.  மேலும், ஆலைக்கு தேவையான மின்சார வசதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கண்காணிப்பதற்கு குழு அமைக்க வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Next Story