Top
undefined
Begin typing your search above and press return to search.

சிகிச்சைக்காக பிரபாகரனின் தாயாரை தமிழகத்தில் கால் வைக்க விடாமல் விரட்டியடித்த கலைஞரின் சிலையை திறக்க வரும் சோனியாவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு - தன் மானம் இழந்ததா தமிழகம்? #GoBackSonia

சிகிச்சைக்காக பிரபாகரனின் தாயாரை தமிழகத்தில் கால் வைக்க விடாமல் விரட்டியடித்த கலைஞரின் சிலையை திறக்க வரும் சோனியாவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு - தன் மானம் இழந்ததா தமிழகம்? #GoBackSonia

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  16 Dec 2018 6:12 AM GMT

சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த தி,மு.க. தலைவர் கருணாநிதியின் சிலையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி இன்று திறந்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து 3 மாநில முதலமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணமடைந்த நிலையில், தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அவருக்கு சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே அண்ணா சிலை இருந்த அதே இடத்தில் மேடை அகலப்படுத்தப்பட்டு அண்ணா மற்றும் கருணாநிதி சிலைகள் அமைக்கப்பட்டன.
புதிய மேடையில் அண்ணா சிலைக்கு அருகே உள்ள கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று மாலை திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோர் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மாலையில் சென்னை வர உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இன்று காலை முதல் ட்விட்டரில் #GoBackSonia என்ற வாசகம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இந்த நிலையில் பிரபாகரனின் தாயார் சிகிச்சைக்காக தமிழகம் வந்திருந்த போது, அவரை தமிழகத்தில் நுழைய விடாமல் திரும்ப அனுப்பி வைக்கப்பட்டதை நினைவு கூர்ந்து, தற்போது சோனியா காந்திக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுவதை நினைத்து வேதனை அடைந்து வருகின்றனர்.
ட்விட்டர் வாசி ஒருவர் எழுப்பியுள்ள கேள்வியில், "சிகிச்சைக்காக பிரபாகரனின் தாயாரை தமிழகத்தில் கால் வைக்க விடாமல் விரட்டியடித்த கலைஞரின் சிலையை திறக்க வரும் சோனியாவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு - தன் மானம் இழந்ததா தமிழகம்?
#GoBackSonia", என்று கேட்டுள்ளார்.
https://twitter.com/nbmayuran/status/1074180560430489601?s=19
அடுத்த ட்விட்டர் வாசி, கேட்கிறார், "சோனியா-வை வரவேற்க வைகோ விமான நிலையம் செல்கிறாரா? 80 வயதான மூதாட்டி, பிரபாகரனின் தாயார் உடல் நல குறைவால் சிகிச்சைக்காக சென்னை வந்தவரை, தி.மு.க - காங்கிரஸ் அரசு அவரை சென்னையில் நுழைய விடாமல் மலயசியா- விற்கு அனுப்பியது ஞாபகம் இருக்கிறதா?, என்று கேட்டுள்ளார்.
https://twitter.com/Ethirajans/status/1074131459093389313?s=19
Next Story