Top
undefined
Begin typing your search above and press return to search.

முதன்முதலாக கருணாநிதியை ஊழல்வாதி என சொல்லி தி.மு.க ஆட்சியை கலைத்தது யார்? கருணாநிதி சிலையை இன்று திறக்க வருவது யார்? : #GoBackSonia ஹேஷ்டேகில் வெளுத்து வாங்கும் ட்விட்டர் வாசிகள்

முதன்முதலாக கருணாநிதியை ஊழல்வாதி என சொல்லி தி.மு.க ஆட்சியை கலைத்தது யார்? கருணாநிதி சிலையை இன்று திறக்க வருவது யார்? : #GoBackSonia ஹேஷ்டேகில் வெளுத்து வாங்கும் ட்விட்டர் வாசிகள்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  16 Dec 2018 10:25 AM GMT

சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த தி,மு.க. தலைவர் கருணாநிதியின் சிலையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி இன்று திறந்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து 3 மாநில முதலமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணமடைந்த நிலையில், தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அவருக்கு சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே அண்ணா சிலை இருந்த அதே இடத்தில் மேடை அகலப்படுத்தப்பட்டு அண்ணா மற்றும் கருணாநிதி சிலைகள் அமைக்கப்பட்டன.
புதிய மேடையில் அண்ணா சிலைக்கு அருகே உள்ள கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று மாலை திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோர் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மாலையில் சென்னை வர உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இன்று காலை முதல் ட்விட்டரில் #GoBackSonia என்ற வாசகம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இதை தொடர்ந்து, ட்விட்டர் வாசி ஒருவர் பதிவிடுகையில், "
கேள்வி - முதன்முதலாக கருணாநிதியை ஊழல்வாதி என சொல்லி தி.மு.க ஆட்சியை கலைத்தது யார்?
பதில் - இந்திரா காந்தி | #StatueOfCorruption
கேள்வி - கருணாநிதி சிலையை இன்று திறக்க வருவது யார்?
பதில் - இந்திரா காந்தியின் மருமகள் சோனியா காந்தி | #GoBackSonia", என்று கூறியுள்ளார்.
https://twitter.com/Vigneshg1991/status/1074245738777825281?s=19
வேறொருவர் பதிவிடுகையில், பிரபாகரன் கொல்லப்பட்ட தினம் அன்று, காங்கிரஸ் அமைச்சரவையில் தி.மு.க-விற்கு எத்தனை அமைச்சர்கள்? என்பது பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/GokulTalks/status/1074231000471764993?s=19
வேறொருவர் பதிவிடுகையில், "இனப்படுகொலை குற்றவாளி, போலி திராவிடம், ஊழல் விஞ்ஞானி" என்று பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/Ramesh8329/status/1074208293713657856?s=19
Next Story