Top
undefined
Begin typing your search above and press return to search.

கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் ! அசத்திய வானதி சீனிவாசன்

கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் ! அசத்திய வானதி சீனிவாசன்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  16 Dec 2018 8:40 AM GMT

கோவை மக்கள் சேவை மையம் மற்றும் கேட் சென்டர் இணைந்து அவினாசி சாலையில் உள்ள ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாமை நேற்று நடத்தின. பா.ஜ.க தமிழக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த வேலை வாய்ப்பு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துக் கொண்டன. கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் மக்கள் சேவை மையம் நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் குவிந்தனர்.
முகாமில், ஓட்டுநர் முதல் மருத்துவர்கள் வரையிலான பணிகள் மற்றும் பகுதி நேர வேலைகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் பட்டதாரிகள் மற்றும் இல்லத்தரசிகள் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் சில நிறுவனங்கள் நேர்முகத் தேர்வை நடத்தி 500-க்கும் மேற்பட்டோருக்குப் பணி ஆணையை உடனடியாக வழங்கினர். இது குறித்து வானதி சீனிவாசன் சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த பேட்டியில், "அனைவருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கத்தில் இந்த முகாம் நடத்தப்படுகிறது" என்றார்.
Credits : Simplicity.in
Next Story