Top
undefined
Begin typing your search above and press return to search.

குமரி மாவட்டத்தில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை - மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உறுதி

குமரி மாவட்டத்தில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை - மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உறுதி

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  16 Dec 2018 6:25 PM GMT

குமரி மாவட்டத்தில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைப்பதற்காக மத்திய அமைச்சர் நட்டாவிடம் பேசியுள்ளதாக அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட உள் நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார். அப்போது பேசுகையில், "மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு படுக்க்ககை வசதி கிடைக்கும். உடன் இருப்பவர்கள் வராந்தாவில் தங்கியிருப்பார்கள். அதற்கு தீர்வு ஏற்படுத்தும் விதமாக, புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சி ஏற்பட வேண்டும்.


காலத்தின் தன்மைக்கேற்ப நாம் மாறாமல் இருந்தால் பின்தங்கி விடுவோம். நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக ஆக்க வேண்டும். நாளைய வளர்ச்சிக்கு ஏற்ப நாம் மாற வேண்டும். குமரி மாவட்டத்தில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைப்பதற்காக மத்திய அமைச்சர் நட்டாவிடம் பேசியுள்ளேன். இயற்கை காப்பாற்றப்பட்டே ஆக வேண்டும். முன்னேற்றத்துடன்கூடிய இயற்கை அழகை நாம் ஏற்படுத்த முடியும்" என்றார்.

Next Story