Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழக பா.ஜ.க பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் காணொலி காட்சியில் கலந்துரையாடினார் பிரதமர்

தமிழக பா.ஜ.க பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் காணொலி காட்சியில் கலந்துரையாடினார் பிரதமர்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  15 Dec 2018 7:03 PM GMT








நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழக பா.ஜ.க பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் 15-ம் தேதி மாலை 4 மணிக்கு கலந்துரையாடினார்.


இது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்,  வரும் நாடாளு மன்றத் தேர்தலுக்கு நாங்கள் முழுவீச்சில் தயாராகி வருகிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏற்கெனவே பொறுப்பாளர்களை நியமித்துவிட்டோம். 66 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் பூத்கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான அனுமதியை பிரதமர் அலுவலகம் கடந்த 8-ம் தேதி எங்களிடம் உறுதி செய்தது. அதன்படி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய 5 நாடாளுமன்றத் தொகுதிகளின் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினர்.
‘என் வாக்குச்சாவடி வலிமையான வாக்குச்சாவடி’ என்று இந்த நிகழ்ச்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக திருமண மண்டபங்களை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடல் சுமார் 2 மணி நேரம் வரை நீடிக்க உள்ளது. ஒரு தொகுதிக்கு 1,000 பேர் என மொத்தம் 5 ஆயிரம் பேர் இதில் பங்கேற்றுள்ளனர். ஒரு தொகுதிக்கு 2 முதல் 3 பேரிடம் காணொலிக் காட்சி மூலம் நேரடியாகவே பிரதமர் மோடி கலந்துரையாடினார்.


https://www.facebook.com/narendramodi/videos/1193185467512724/









Next Story