Top
undefined
Begin typing your search above and press return to search.

₹1,258 கோடி ஒப்புதல் அளித்த மோடி சர்க்கார் : தமிழக வரலாற்றில் முதல் முறையாக AIIMS மருத்துவமனை அமைகிறது

₹1,258 கோடி ஒப்புதல் அளித்த மோடி சர்க்கார் : தமிழக வரலாற்றில் முதல் முறையாக AIIMS மருத்துவமனை அமைகிறது

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  17 Dec 2018 2:40 PM GMT

மதுரையை அடுத்த தோப்பூரில், 200 ஏக்கர் நிலப்பரப்பில், 750 படுக்கைகள் கொண்ட அதி நவீன AIIMS மருத்துவமனை அமைக்கப் பட உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
மதுரையில் AIIMS அமைக்க உத்தரவிட்ட பிரதமர் மோடி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்த முதல்வர், AIIMS மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புக்காக 100 இடங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் முன்னர் தெரிவித்திருந்தார்.
தற்போது, ₹1,258 கோடி ரூபாய் செலவில் AIIMS மருத்துவமனை அமைக்க மத்திய மோடி அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. இந்த ஒப்புதலுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
https://twitter.com/nsitharaman/status/1074670229257625600?s=19
இதனை தொடர்ந்து அ.தி.மு.க சார்பிலும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் பதிவிடுகையில், "சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழின் தலைநகரான மதுரைக்கு மேலும் புகழ் சேர்க்கும் வண்ணம் இந்தியாவின் உயரிய AIIMS மருத்துவமனை தந்து, அதனை விரைவில் தொடங்கிட மத்திய அமைச்சரவை மூலம் ஒப்புதல் வழங்கிய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எனது சார்பாகவும் ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம் முழுவதும் பிரதமர் திரு. நரேந்திர மோடி  அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்நாளை ஓர் திருவிழாவாக கொண்டாடுவோம். தமிழுக்கும், தமிழகத்திற்கும் தொடர்ந்து நன்மைகள் பல செய்து வரும் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.", என்று தெரிவித்துள்ளார்.

https://twitter.com/PonnaarrBJP/status/1074675931145482245?s=19
பா.ஜ.க மாநில தலைவர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பதிவிடுகையில், "மதுரை தோப்பூரில் ₹1,258 கோடியில் #எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளித்துள்ள மதிப்பிற்குரிய நம் பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்", என்று பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/DrTamilisaiBJP/status/1074675732700262400?s=19
Next Story