Top
undefined
Begin typing your search above and press return to search.

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நியதிக்கு எதிரானது என விளாசிய பசுமை தீர்ப்பாயம் - ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என 45,000 பேர் கையெழுத்திட்ட மனு : திறக்கப்படுமா ஸ்டெர்லைட்?

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நியதிக்கு எதிரானது என விளாசிய பசுமை தீர்ப்பாயம் - ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என 45,000 பேர் கையெழுத்திட்ட மனு : திறக்கப்படுமா ஸ்டெர்லைட்?

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  16 Dec 2018 7:14 PM GMT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட உத்தரவிட்டது. தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி, தருண் அகர்வால் தலைமையில், குழு ஒன்றை அமைத்தது ஆறு வார காலத்திற்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. பின்னர், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது இயற்கை நியதிக்கு எதிரானது என்று பசுமை தீர்ப்பாயம் அறிவித்தது.



அதற்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் 5 ஆயிரம் பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என 45,000 பேர் கையெழுத்திட்டு ஆதரவு மனுக்களை கடந்த 3 வாரங்களுக்கு முன்பு அளித்துள்னர். தூத்துக்குடியில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், மனு கொடுக்க வந்தவர்களை, குண்டர்கள் விரட்டினர் என ஆலை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.



இந்த நிலையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி, தெற்கு வீரபாண்டியபுரம், குமாரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, முக்காணி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும், பல்வேறு தரப்பினரும் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  மனு அளித்தனர். ஆத்தூர் பாசன விவசாய சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் ஆறுமுகநேரி, உடன்குடி பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். ஆலையை உடனடியாக திறக்கக் கோரி மனு அளித்தனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது.
ஆலையை மூடியதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீண்டும் திறக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலையினால் எந்த நோயும் ஏற்படவில்லை என்றும், மாசு ஏற்படுவதாக கூறுவது வதந்தி என்பது, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த மக்களின் கருத்தாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தூண்டி விடப்பட்ட ஒன்று என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் தனித்தனியாக ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் அவர்கள் மனு அளித்தனர். தூத்துக்குடி அருகேயுள்ள வடக்கு சிலுக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த மடத்துப்பட்டி கிராம மக்கள் சுமார் 100 பேர் அளித்த மனுவில், ‘எங்கள் கிராமத்துக்கு அருகே ஸ்டெர்லைட் ஆலை 22 ஆண்டுகளாக இயங்கி வந்தது. இதனால் கிராம மக்கள் பல்வேறு வேலைவாய்ப்பை பெற்று வந்தோம். தற்போது தீய சக்திகளின் தூண்டு தல் காரணமாக ஆலை மூடப்பட்டு ள்ளது. இதனால் எங்கள் கிராமத்தை சேர்ந்த டிரைவர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக சென்னை, விசாகப்பட்டினம், கேரளா போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஸ்டெர்லைட் ஆலையை உடனே மீண்டும் திறக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வந்த கிராம மக்களே ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருப்பது தூத்துக்குடியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலமாக தூத்துக்குடி கலவரம் தீய சக்திகளால் தூண்டிவிடப்பட்டு அரங்கேற்றப்பட்டது என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடப்பது அனைத்திற்கும் காரணம் பிரதமர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தான் என்று கூறி மக்கள் இறப்பிலும் அரசியல் செய்து வருவது வேதனையை ஏற்ப்படுத்துகிறது. இதற்கு முன்னர் ஐக்கிய முன்னணி ஆட்சியில் இருந்த பொழுது 2007ல் இருந்து 2012வரை இதைவிடக் கொடுமையான நிகழ்வுகள் நடந்த பொழுது வாய் மூடி மவுனியாக இருந்துவிட்டு இப்போது அரசியலுக்காக தகிடுதத்தம் ஆடி வருவது கேலிக்கூத்தாகியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனை அடுத்து, தமிழக அரசு தனது முடிவை மாற்றிக்கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.



Inputs from OpIndia
Next Story