Top
undefined
Begin typing your search above and press return to search.

எதிரி நாடுகள் இசைக்கும் மெட்டுக்கு ஏற்ப ராகுல்காந்தி நடனமாடுகிறார் : ஜம்மு-காஷ்மீர் மாநில பா.ஜ.க தலைவர் ரவீந்தர் ரெய்னா

எதிரி நாடுகள் இசைக்கும் மெட்டுக்கு ஏற்ப ராகுல்காந்தி நடனமாடுகிறார் : ஜம்மு-காஷ்மீர் மாநில பா.ஜ.க தலைவர் ரவீந்தர் ரெய்னா

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  16 Dec 2018 6:50 PM GMT

பாகிஸ்தான்சீனா போன்ற எதிரி நாடுகளின் கைப்பாவையாக காங்கிரஸ் கட்சி செயல்படுவதோடுரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய நெருக்கடி கொடுத்து வருகிறது என்று ஜம்மு-காஷ்மீர் மாநில பா.ஜ.க தலைவர் ரவீந்தர் ரெய்னா குற்றம் சாட்டியுள்ளார். சனிக்கிழமை அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது: தேசத்தின் பாதுகாப்பு சார்ந்த விஷயத்தோடு காங்கிரஸ் கட்சி விளையாடி வருகிறது. பாகிஸ்தான்
சீனா போன்ற எதிரி நாடுகள்பாதுகாப்பு தளவாடங்களையும்ஆயுதங்களையும் கொள்முதல் செய்வதன் மூலமாக அவர்களைப் பலப்படுத்தி வருகின்றனர். ஆனால்எல்லையில் அத்துமீறும் அண்டை நாடுகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் நோக்கில் ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸ் அரசுடன் பிரதமர் மோடி ஒப்பந்தம் செய்யும் போது காங்கிரஸ் கட்சி அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

இந்தியா பலமடைந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில்ராகுல் காந்தியும்,காங்கிரஸ் தலைவர்களும் எதிரி நாடுகளுடன் சேர்ந்து சதி செய்து வருகின்றனர். பாகிஸ்தான்சீனா ஆகிய நாடுகளின் நலனுக்காகத்தான் காங்கிரஸ் கட்சி கூக்குரல் எழுப்புகிறது. இந்நாட்டின் எதிரிகள் இசைக்கும் மெட்டுக்கு ஏற்ப ராகுலும், காங்கிரசாரும் நடனமாடுகின்றனர்

என்றார். ஜம்மு காஷ்மீரில்மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் பா.ஜ.க வெற்றி பெறும் என்றும்மாநிலத்தில் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சியமைக்கும் என்றும் அவர் கூறினார்.
Next Story