Top
undefined
Begin typing your search above and press return to search.

ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின் ! கடும் எதிர்ப்பை தெரிவித்த எதிர்க்கட்சிகள் !

ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின் ! கடும் எதிர்ப்பை தெரிவித்த எதிர்க்கட்சிகள் !

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  17 Dec 2018 4:58 AM GMT

சென்னை தி.மு.க வின் தலைமை செயலகம் அறிவாலயத்தில் கருணாநிதியின் உருவ சிலை நேற்று திறக்கப்பட்டது. சிலையை திறந்து வைப்பதற்காக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி சென்னை வந்தடைந்தனர். விழாவில் சந்திர பாபு நாயடு, ரஜினி காந்த், நாராயணஸ்வாமி மற்றும் பலர் பங்கேற்றனர். சோனியாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackSonia என்று ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.
விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ராகுலை பிரமராக்குவோம். பா.ஜ., வீழ்த்தும் திறமை எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளரான ராகுலுக்கு உண்டு என பேசினார். லோக்சபா தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து வரும் நிலையில், ஸ்டாலினின் இந்த பேச்சு கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி கூட்டணியின் மூத்த தலைவர் ஒருவர், ஸ்டாலினின் பேச்சு ஏற்புடையதல்ல. தேர்தல் முடிவிற்கு பிறகே யார் பிரதமர் என்று தெரிய வரும் என்றார்.
சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் ஸ்டாலிலின் பேச்சால் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. திரணமோல் காங்கிரஸ் மம்தா பனர்ஜீ கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

Next Story