Kathir News
Begin typing your search above and press return to search.

2 ஆண்டுகளில் 5,86,000 ஏழை குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது : இனி 100% அனைத்து ஏழைகளுக்கும் இலவச இணைப்பு வழங்கப்படும்

2 ஆண்டுகளில் 5,86,000 ஏழை குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது : இனி 100% அனைத்து ஏழைகளுக்கும் இலவச இணைப்பு வழங்கப்படும்

2 ஆண்டுகளில் 5,86,000 ஏழை குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது : இனி 100% அனைத்து ஏழைகளுக்கும் இலவச இணைப்பு வழங்கப்படும்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Dec 2018 6:48 PM GMT







2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிரதம மந்திரியின் உஜ்வாலா திட்டம், முதலில் வறுமைக் கோட்டிற்கு கீழ் (பிபிஎல்) உள்ள குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புகளை வழங்குவதை இலக்காகக் கொண்டிருந்தது. அந்த இலக்கின் மூலம் தற்போது 5,86,000 ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.


https://twitter.com/ANI/status/1074681214420901889?s=19


தற்போது அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் இலவச சமையல் எரிவாயு (எல்.பி.ஜி) இணைப்புகளை வழங்கும் வகையில், மத்திய மோடி சர்க்கார் திங்கட்கிழமை(நேற்று) அன்று உஜ்வாலா திட்டத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.


ஏழை குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புகளை வழங்க பிரதமர் மந்திரியின் உஜ்வாலா யோஜனா திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான ஒப்புதலை Cabinet Committee on Economic Affairs (CCEA) திங்களன்று (நேற்று) வழங்கியது.


இந்த திட்டத்தின் கீழ், ஏழை குடும்பங்களுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு இலவச எல்.பி.ஜி எரிவாயு இணைப்புக்கும் அரசாங்கம் சார்பில், சில்லறை விற்பனையாளர்களுக்கு ₹1,600 மானியம் வழங்கப்படும். இந்த மானியம் சிலிண்டர் மற்றும் எரிவாயு இணைப்பிற்கு பயன்படும். பயனாளி சொந்த சமையல் அடுப்பை வாங்கி கொள்ள வேண்டும்.


ஏழைகளின் பணச்சுமையை குறைப்பதற்கு, அடுப்பு மற்றும் முதல் எரிவாயு சிலிண்டருக்கு ஆகும் செலவை தவணை முறையில் செலுத்த இந்த திட்டம் அனுமதிக்கிறது. 2011 ஆம் ஆண்டின் சமூக-பொருளாதார சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு (எஸ்.ஈ.சி.சி) அடிப்படையிலிருந்தே இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டன. பின்னர் இந்த இலவச இணைப்புகள் அனைத்து பட்டியல் இன சமூகத்தினருக்கும் (SC / ST), இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும், மலை வாழ் மக்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போன்றவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இப்போது, பாரத பிரதமர் மோடியின் இலவச எரிவாயு திட்டம் அனைத்து ஏழைகளுக்கும் கிடைக்கும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது மோடி சர்க்காரின் மிக பெரிய சாதனையாக கருதப்படுகிறது.


Based on inputs from PTI







Next Story
கதிர் தொகுப்பு
Trending News