Top
undefined
Begin typing your search above and press return to search.

இடைதரகர்களை கொண்டு இராணுவ ஒப்பந்தங்கள் செய்யாததால் கோபம் - காங்கிரஸாரின் உச்ச நீதிமன்ற அவமதிப்பு குறித்து பிரதமர் மோடி சாடல்

இடைதரகர்களை கொண்டு இராணுவ ஒப்பந்தங்கள் செய்யாததால் கோபம் - காங்கிரஸாரின் உச்ச நீதிமன்ற அவமதிப்பு குறித்து பிரதமர் மோடி சாடல்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  18 Dec 2018 3:16 AM GMT

காங்கிரஸ் ஆட்சியின்போது இராணுவத்துக்கு தேவையான போபார்ஸ் பீரங்கிகள் வாங்கியது முதல் அகஸ்டா லேண்ட் ஹெலிகாப்டர் வாங்கியது வரை இத்தாலி நாட்டைசேர்ந்த சோனியாவின் உறவினர் குவாட்ரோச்சி, இந்திரா காந்தியின் நண்பரின் மகனான இங்கிலாந்தை சேர்ந்த மைக்கேல் கிறிஸ்டியன் ஆகியோர்தான்      இடையில் புரோக்கர்களாக இருந்து வாங்கி தந்தனர். சோனியா குடும்பத்துக்கு நெருங்கிய நண்பர்களான அவர்கள் அந்த பேரத்தில் பல நூறு கோடி கமிஷனாக பெற்றார்கள் என்பது குற்றச்சாட்டு.
இந்த நிலையில் பிரதமர் மோடி சென்ற 2015-ஆம் ஆண்டு பிரான்ஸ் சென்றபோது இராணுவத்துக்கான விமானப்படை விமானங்கள் வாங்க அந்த நாட்டு ரபேல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டார். அந்த விமான கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதாக இராகுல் காந்தி, காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. சுப்ரீம் கோர்டில் வழக்கும் தொடர்ந்தன. விசாரணையில் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் முறைப்படி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கோர்ட் தீர்ப்பளித்தது. ஆனால், கோர்ட் தீர்ப்புக்குப் பிறகும் காங்கிரசார் மற்றும் ராகுல் காந்தி கோர்ட்டை அவமதிக்கும் வகையில் பழைய குற்றச்சாட்டை கூறி வருகிறார்.
இந்த நிலையில், சோனியா காந்தியின் எம்பி தொகுதியான உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலி தொகுதிக்கு, பிரதமர் நரேந்திர மோடி நேற்று சுற்றுப்பயணம் சென்றார். அப்போது அவர் பேசியதாவது:
நம் நாட்டில், தற்போது, இரு வித சித்தாந்தங்கள் உருவெடுத்துள்ளன.
கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும், ராணுவத்தை பலப்படுத்த பயன்படுத்தும், நம் மத்திய அரசின் சித்தாந்தம் ஒன்று. எதிரணியினரின் சித்தாந்தம் மற்றொன்று. நம் ராணுவம், பலம் பெறக்கூடாது எனக் கருதும் தீய சக்திகளுடன், காங்கிரஸ் கூட்டு சேர்ந்துள்ளதை மக்கள் கண்கூடாக பார்த்துள்ளனர்.
முந்தைய, போபர்ஸ் ஊழலில் இடைத்தரகனாக செயல்பட்டவர் குவாட்ரோச்சி. தற்போதைய, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழலில், மைக்கேல் கிறிஸ்டியன் இடைத்தரகனாக செயல்பட்டுள்ளார். இந்த இரு மாமாக்களும், ராணுவ ஒப்பந்தங் களில் இல்லாதது, காங்.,கிற்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, பொய்களை காங்கிரஸ் அள்ளி வீசி வருகிறது, இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். பிரதமரின் இப்பேச்சை அங்கு கூடியிருந்த இலட்சக் கணக்கான மக்கள் ரசித்தனர்.
Next Story