Top
undefined
Begin typing your search above and press return to search.

விஜய் திவாஸ் - தேசிய தலைவர்கள், முப்படை தலைவர்கள் மரியாதை!

விஜய் திவாஸ் - தேசிய தலைவர்கள், முப்படை தலைவர்கள் மரியாதை!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  18 Dec 2018 3:00 AM GMT

பாகிஸ்தானுக்கு எதிரான 1971-ஆம் ஆண்டு டிசம்பர் 16 அன்று போரில், தங்களது உயிரை தியாகம் செய்து தேசத்தின் வெற்றிக்கு வித்திட்ட நம் ராணுவ வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் புகழாரம் சூட்டியுள்ளனர்.
கடந்த 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரில் நம் தேசம் வெற்றி பெற்றதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர் 16-ஆம் தேதி  வெற்றி தினமாக(விஜய் திவாஸ்) கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பாகிஸ்தானுடனான போரில் தங்களது இன்னுயிரை நீத்து, தேசத்தை பாதுகாத்ததுடன், மனித சுதந்திரத்தை உலகுக்கு உணர்த்திய நம் ராணுவ வீரர்களை இந்த நாளில் நாம் அனைவரும் நன்றியுடன் நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "தன்னிகரில்லா வீரத்தால் எதிரியை வீழ்த்தி நாட்டுக்கு வெற்றியை தேடித் தந்த நம் ராணுவ வீரர்களை இந்த தேசம் இன்று பெருமையுடன் நினைவுக்கூறுகிறது. அவர்களின்  தேசப்பற்று ஒவ்வொரு இந்தியனுக்கும் ஊக்கும் அளிக்கவல்லது" என புகழாரம் சூட்டியுள்ளார். இதையொட்டி, டெல்லியில் உள்ள போர் நினைவு சின்னமான அமர் ஜவான் ஜோதியில், உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வீர வணக்கம் செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், ராணுவ துணைத் தளபதி தேவ்ராஜ் அன்பு, கடற்படைத் தளபதி சுனில் லன்பா, விமானப்படைத் தளபதி பிரேந்தர் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வீர வணக்கம் செலுத்தினர்.
Next Story