Top
undefined
Begin typing your search above and press return to search.

99% பொருட்களை 18% ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவர நடவடிக்கை : ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வரப்பிரசாதமாகும் முக்கிய நகர்வு

99% பொருட்களை 18% ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவர நடவடிக்கை : ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வரப்பிரசாதமாகும் முக்கிய நகர்வு

SaiganeshBy : Saiganesh

  |  18 Dec 2018 6:31 PM GMT

மும்பையில் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், பல ஆண்டுகளாகவே நாட்டிற்கு ஜி.எஸ்.டி வரி முறை தேவையாக இருந்தது என்றும், அதை அமல்படுத்தியதன் மூலம் வர்த்தகச் சந்தையில் இருந்த முரண்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பொருளாதாரமும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாறியிருப்பதாக அவர் கூறினார். ஜி.எஸ்.டி முறைக்கு முன்னர், 65 லட்சம் வாணிப நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்திருந்ததாகவும், இந்த எண்ணிக்கை மேலும் 55 லட்சம் உயர்ந்திருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.
புதிய பாதையில் இந்திய பொருளாதாரத்தை கட்டமைக்கும் பணி தொடரும். வணிக நிறுவனங்களுக்கு மிகவும் சுமூகமான முறையாக ஜி.எஸ்.டி முறையை மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறிய பிரதமர், சாத்தியமான அளவுக்கு வணிக நிறுவனங்களுக்கு மிகவும் சுமூகமான முறையாக ஜி.எஸ்.டி முறையை மாற்ற வேண்டும் என்பதே அரசின் கருத்து எனவும் அவர்
குறிப்பிட்டார்
. ஜி.எஸ்.டி முறை பரந்து விரிந்த அளவில் நிறுவப்பட்டிருப்பதாகவும், பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் உள்ளடக்கி, 99 சதவீத பொருட்களை 18 சதவீத ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் கூறினார். அரசின் பல்வேறு நலத்திட்டங்களை சுட்டிக்காட்டி பேசிய மோடி, புதிய இந்தியாவை கட்டமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.
இந்த நகர்வு, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீதான உள்ள பணச்சுமையை குறைத்து, சாமானிய மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.
Next Story