Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தூண்டி விடப்பட்ட ஒன்று : ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போர்க்கொடி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தூண்டி விடப்பட்ட ஒன்று : ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போர்க்கொடி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தூண்டி விடப்பட்ட ஒன்று : ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போர்க்கொடி

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Dec 2018 3:18 PM GMT

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியரிடம் 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தனர்.


கோரம்பள்ளம், சோரீஸ்புரம், அய்யனடைப்பு, தெற்குவீரபாண்டியபுரம் ராஜகோபால், குமரெட்டையாபுரம் ராமசாமி, மீளவிட்டான் முத்துராஜ் , பண்டாரம்பட்டி, முக்காணி போன்ற பல இடங்களில் உள்ள மக்களும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தியாகராஜன், தேவேந்திரகுல சமத்துவ நலச்சங்கம் ராஜா,, முக்காணி , தூத்துக்குடி கிழக்குபகுதி மக்கள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 1500-க்கும் மேற்பட்ட மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.


நேற்றைய தினம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ஒரு தரப்பினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும் அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஆத்தூர் பாசன விவசாய சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் ஆறுமுகநேரி, உடன்குடி பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1500-க்கும் மேற்பட்டவர்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். ஆலையை உடனடியாக திறக்கக் கோரி மனு அளித்தனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது.


ஆலையை மூடியதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீண்டும் திறக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலையினால் எந்த நோயும் ஏற்படவில்லை என்றும், மாசு ஏற்படுவதாக கூறுவது வதந்தி என்பது, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த மக்களின் கருத்தாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தூண்டி விடப்பட்ட ஒன்று என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News