Top
undefined
Begin typing your search above and press return to search.

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை வாங்கினால் ஊக்கத்தொகை : மத்திய அரசு திட்டம்

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை வாங்கினால் ஊக்கத்தொகை : மத்திய அரசு திட்டம்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  20 Dec 2018 7:58 PM GMT

சுற்றுச் சூழல் காப்பு என்பது இப்போது மிகவும் அவசியமான தாகிவிட்டது. நகரங்களில் அதிகரிக்கும் வாகனங்களால் சுற்றுச் சூழல் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. மின்சாரத்தில் இயங்கும் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை அதிகம் பயன்படுத்த வசதியாக பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் முதல்படியாக 16 வயது நிரம்பியவர்கள் பேட்டரியால் இயங்கும் இரு சக்கர வாகனங்களை ஓட்ட அனுமதிப்பது என்று அரசு முடிவு எடுத்திருந்தது. (தற்போது 18 வயது நிரம்பியவர்கள் தான் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற முடியும்). இதே போல வாகனங்களை சார்ஜ் செய்ய இலவச சார்ஜிங் மையத்தை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக வாகன புகையால் திணறும் பெரு நகரங்களில் இத்தகைய வசதிகளை ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. தேசிய மின் போக்குவரத்து திட்டம் (என்.இ.எம்.எம்.பி) திட்டத்தின்படி 70 லட்சம் பேட்டரி வாகனங்களை அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் புழக்கத்தில் விடுவதாக கடந்த 2016 இல் கூறப்பட்டது. பேட்டரி வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்க ₹95 கோடி ஊக்கத் தொகை ஒதுக்கப்பட்டது . அதே போல பேட்டரி இறக்குமதி வரி 26 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இத்திட்டத்துக்
கான மொத்த செலவு மதிப்பு ₹14 ஆயிரம் கோடியாகும். பேட்டரி வாகனங்கள் செயல்படுவதற் கேற்ற சூழலை, கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதே இதன் நோக்கம். பேட்டரி கார்கள் உருவாவதால் கரியமிலவாயு வெளியேற்றம் 25 லட்சம் டன் அளவுக்குக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கரியமில வாயு வெளியேற்றம் 1.5 சதவீத அளவுக்குக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்று
ச் சூழலைக் காக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் நிச்சயம் சிறந்த பலனைத் தரும் என்று நம்பலாம்.
தற்போது மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை வாங்க ஊக்குவிக்கும் விதத்தில் பெட்ரோல், டீசலில் இயங்கும் கார்களுக்கு ₹12 ஆயிரம் ரூபாய் வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவை கட்டுப்படுத்தவும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மின்சார வாகனங்களை வாங்குவோருக்கு முதல் ஆண்டில் ₹25 ஆயிரம் முதல் ₹50 ஆயிரம் வரையும் ஊக்கத்தொகை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பேட்டரி தயாரிப்பாளர்களுக்கும் ஊக்கத்தொகை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான செலவை ஈடுகட்டும் விதத்தில் பெட்ரோல், டீசலில் இயங்கும் கார்களை வாங்குபவர்களுக்கு ₹12 ஆயிரம் வரி விதிக்கவும், வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பின் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story