Top
undefined
Begin typing your search above and press return to search.

பொன்.மாணிக்கவேல் மீது ஆதாரமின்றி கூறப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது: உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

பொன்.மாணிக்கவேல் மீது ஆதாரமின்றி கூறப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது: உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  20 Dec 2018 7:02 PM GMT

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொன். மாணிக்கவேலுக்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் டி.ஜி.பி-யிடம் புகார் அளித்த விவகாரத்தைக் கொண்டு, வாய் மொழி அடிப்படையிலான புகார்களை ஏற்க முடியாது என்றும், ஆதாரமற்ற புகார்களைக் கொண்டு இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்றும் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் ஆர்.மகாதேவன்பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஆஜராகிசிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொன். மாணிக்கவேலுக்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் டி.ஜி.பி-யிடம் புகார் அளித்தது குறித்து நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள்வெறும் வாய் மொழி வாக்கு மூலத்தின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. முறையான ஆவண ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆதாரங்களைத் தாக்கல் செய்தால்அதனை நீதிமன்றம் ஆய்வு செய்யும்” என்றனர். இது தொடர்பாக மனுதாக்கல் செய்வதாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தெரிவித்தார்.
பின்னர் சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் சீலிடப்பட்ட கவரில் அறிக்கை ஒன்றை நீதி மன்றத்தில் தாக்கல் செய்தார்.
Next Story