Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழக கோவில்களை ஆளுநர் தலைமையிலான குழுவின் கட்டுப்பாட்டில் பராமரிக்க வேண்டும் : முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கங்கப்பா யோசனை

தமிழக கோவில்களை ஆளுநர் தலைமையிலான குழுவின் கட்டுப்பாட்டில் பராமரிக்க வேண்டும் : முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கங்கப்பா யோசனை

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  20 Dec 2018 6:53 PM GMT

தமிழக கோவில் நிர்வாகத்தில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்றும் கோயில்கள் அனைத்தும் ஆளுநர் தலைமையிலான குழுவின் கட்டுப்பாட்டில் பராமரிக்க வேண்டும் என்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கங்கப்பா கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் தொன்மையான வரலாறு, கலாச்சாரத்தின் கம்பீர சாட்சிகளாக இருப்பது கோவில்கள் தான். சைவம், வைணவத்தை போற்றிய மன்னர்கள் பிரம்மாண்ட கோயில்களை எழுப்பியதுடன் கோயிலுக்கு தானமாக அளித்த நிலங்களை கோவில் கல்வெட்டுகளில் செதுக்கி வைத்தனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் கடந்த 60 ஆண்டுகளில் அதிகாரிகள் துணையுடன் சிலைகள் கடத்தப்பட்ட தகவல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடத்தப்பட்ட சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் மீட்டுவரும் நிலையில், கோவில் நிர்வாகத்தில் அரசு இருக்கக்கூடாது என்ற கருத்தும் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படுகிறது.
இந்தக் கருத்தை மிகவும் அழுத்தமாக 30 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசுக்கு தெரிவித்தவர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கங்கப்பா. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகியவர். அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில், ‘‘தமிழ் மன்னர்களால் எழுப்பப்பட்ட கோவில்களை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். இவற்றை நாம் உருவாக்க முடியாது என்றாலும் பாதுகாக்க வேண்டும். கோவில்களை பாதுகாக்கும் கடமையில் இருந்து அரசு தவறிவிட்டது. கோவில் சொத்துக்களை அனுபவிக்க அரசியல்வாதிகள் விரும்புகின்றனர். கோயில்களில் இருந்து கிடைக்கும் வருமானம் கோவில்கள் பராமரிப்புக்காகவே பயன்படுத்த வேண்டும். கோவில்கள் அனைத்தும் ஆளுநரின் தலைமையில் அமைக்கப்படும் குழுவின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்.
இது தொடர்பான அறிக்கையை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் அளித்தேன். அவர் மறைவிற்கு பிறகு நடைபெற்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் எனது அறிக்கையை அமல்படுத்தப் போவதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். ஏற்கனவே ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது தென்மாநில கோவில்களை பாதுகாக்க இதுபோன்ற முயற்சியை எடுத்தார். தற்போது அறிக்கையை அமல்படுத்தும் நடவடிக்கைகள் தேவை என்றார்.
Inputs from The Hindu.
Next Story