Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழக பூத் பொறுப்பாளர்களுடன் பிரதமர் மோடி 2-ம் கட்ட வீடியோ நேரடி உரையாடல்: மத்திய அரசின் திட்டப்பலன்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டுகோள் விடுத்தார்

தமிழக பூத் பொறுப்பாளர்களுடன் பிரதமர் மோடி 2-ம் கட்ட வீடியோ நேரடி உரையாடல்: மத்திய அரசின் திட்டப்பலன்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டுகோள் விடுத்தார்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  21 Dec 2018 6:04 AM GMT

தென் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி மாவட்ட பா.ஜ.க.பூத் பொறுப்பாளர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று (19.12.2018 ) உரை நிகழ்த்தினார். மாலை 4.30 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி ஒரு மணி நேரம் வரை நடைபெற்றது.
முதலில் அனைவருக்கும் தமிழில் வணக்கம் கூறிய பிரதமர் மோடி திருக்குறள் கூறி வேலூர் மாவட்ட தொண்டர்களுடன் உரையாடலை தொடங்கினார். அப்போது தொண்டர்கள் பாரத் மாதாகி ஜே என கோஷமிட்டு தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். அடுத்து காஞ்சிபுரம், விழுப்புரம், பாண்டிச்சேரி, தென் சென்னை மாவட்ட பூத் பொறுப்பாளர்களுடன் மனம் விட்டு பேசினார். மத்திய அரசின் திட்டங்கள் அமலாக்கப்படுவது பற்றியும், திட்ட நன்மைகளை மக்களுக்கு எவ்வாறு எடுத்து செல்வது என்பது குறித்தும் பேசினார். ஒவ்வொரு மாவட்டத்தினரையும் பேச அழைத்தார். அனைவரும் தாங்கள் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டிய விஷயங்கள் குறித்தும்
சில திட்டங்கள் குறித்த சந்தேகங்களையும் கேட்டனர். அப்போது பதிலளித்த பிரதமர் மோடி அவர்கள்  வரும் காலத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கட்சி வளர்ச்சிபணிகள், வரும் 2019 தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தொண்டர்களிடம் பேசினார்.
முத்ரா திட்டம், பிரதமரின் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டம் உட்பட பல திட்டங்கள் மூலம் தமிழகத்துக்கு கிடைத்த பலன்கள் பற்றி மோடி கூறினார். மேலும்
மாதங்களில் 5 லட்சம் பேர் மருத்துவ காப்பீடு பெற்றுள்ளனர். முந்தைய ஆட்சியை ஒப்பிடும் போதுதற்போதுகட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் மட்டும் 12,000 கிராமங்களில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய கழிப்பிடத் திட்டங்களை நினைவு கூர்ந்தார். இந்த மாநிலத்தில் மட்டும் 27 லட்சம் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்
முத்ரா கடன் திட்டத்தை அதிக அளவில் தமிழகம் பயன்படுத்திக் கொண்டது என்றும் பக்கா வீடுகள் திட்டத்தில் மட்டும் நான்கு இலட்சத்து முப்பதினாயிரம் பயனடைந்துள்ளதாகவும் கூறினார்.
மூத்தக்குடிமக்களுக்கு செய்துவரும் பல திட்டங்கள் குறித்து குறிப்பிட்டார். அதேபோல கர்ப்பிணி பெண்களுக்கு செய்துவரும் நலத்திட்டங்கள்மலிவு விலை மருந்து கடைகள் மூலம் 70 சதவீதத்திற்கும் குறைவான விலையில் வழங்கும் திட்டம்
ஏழைகளுக்கான இலவச டயலசிஸ் திட்டங்கள்ஜி.எஸ்.டி மூலம் பாதிப்பு இல்லாமல் நடுத்தர மக்களை காப்பாற்றியதுஅரிசி பருப்பு விலைகளை விவசாய அபிவிருத்தி திட்டங்கள் மூலம் கட்டுக்குள் கொண்டு வந்ததுவிவசாயிகளுக்கு ₹300 விலையில் யூரியா வழங்குவது ஆகிய பல திட்டங்களை பற்றி எளிமையாக விவரித்த மோடி அவர்கள்இந்த திட்டங்கள் குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்குமாறும் அவர்களையும் நம் தேச தொண்டின் பங்குதாரர்களாக்கிக் கொள்ளவேண்டும் என்றும் அறிவுரை கூறினார். 
Next Story