Top
undefined
Begin typing your search above and press return to search.

மத்திய, மாநில அரசுகளின் ஊக்குவிப்பு காரணமாக நடப்பு ஆண்டில் 82 லட்சத்து 69 ஆயிரம் ஏக்கர் நிலம் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண்துறை தகவல்

மத்திய, மாநில அரசுகளின் ஊக்குவிப்பு காரணமாக நடப்பு ஆண்டில் 82 லட்சத்து 69 ஆயிரம் ஏக்கர் நிலம் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண்துறை தகவல்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  23 Dec 2018 5:31 PM GMT

கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பாண்டில் விவசாயம் தழைத்துள்ளது. காவிரியில் திறக்கப்பட்ட நீர் மற்றும் போதிய பருவமழை, உரிய நேரத்தில் வங்கிக்கடன்கள், நேர்த்தி செய்யப்பட்ட விதைகள், போதுமான அளவுக்கு உர சப்ளை ஆகிய மத்திய, மாநில அரசுகளின் ஊக்குவிப்பு காரணமாக நடப்பு ஆண்டில் 82 லட்சத்து 69 ஆயிரம் ஏக்கர் நிலம் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
35 லட்சத்து 6ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடியும், 8 லட்சத்து ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மக்காசோளம் மற்றும் 21லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் சிறுதானியப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
லட்சம் ஏக்கர் பரப்பளவில் உளுந்து, 11லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பச்சை பயிர், 2 லட்சத்து ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பருத்தி உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. அதே போல் 
லட்சத்து ஆயிரம் ஏக்கர் பரப்பில் கரும்பு மற்றும் லட்சத்து ஆயிரம் ஏக்கர் பரப்பில் எண்ணை வித்துக்கள் என மொத்தம், 82லட்சத்து 69 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தில் இந்தாண்டு தற்போது வரை சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story