Top
undefined
Begin typing your search above and press return to search.

உற்பத்தி, தொழில் மற்றும் வர்த்தக துறைகளில் மோடி சர்க்கார் செய்துள்ள சீர்திருத்தங்கள்

உற்பத்தி, தொழில் மற்றும் வர்த்தக துறைகளில் மோடி சர்க்கார் செய்துள்ள சீர்திருத்தங்கள்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  23 Dec 2018 6:04 PM GMT

இந்தியாவின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வித்திடுவதில் தொழில் மற்றும் வர்த்தகம் பெரும் பங்கையளிக்கிறது. 2017 உலக வங்கி தரவுகளின்படி இந்தியா  பொருளாதாரத்தில் உலகளவில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. மத்திய அரசாங்கத்தின் உள் கட்டமைப்பு சார்ந்த சீர்த்திருத்தங்கள், துறை சார்ந்த சீர்திருத்தங்கள், சமூக மற்றும் பொருளாதார சீர்த்திருத்தங்களினால் இந்த நிலை எய்தப்பட்டுள்ளது. 2017 உலக வங்கி அறிக்கையின்படி இந்தியாவின் ஜி.டி.பி 2.597 ட்ரிலியன் (Trillion) டாலராக உள்ளது. தொழில் மற்றும் வர்த்தகம் செய்ய சிறந்ததாக விளங்கும் இந்தியா இருக்கிறது. இதற்கு மத்திய அரசின் சீர்த்திருத்தங்கள், மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் முயற்சிகள் முக்கிய காரணங்களாக இருக்கிறது.

இந்தியா தொழில் செய்ய ஏதுவாக இருக்க திரு சுரேஷ் பிரபு தலைமையிலான மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 9 டிசம்பர் 2018

,இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்டு உள்ள அறிக்கையில் புதிய தொழில்துறை கொள்கைப்பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு அளித்துள்ள பேட்டியில் புதிய தொழில் துறை கொள்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அதை செயல்ப்படுத்துவதற்கான திட்டமும் முடிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். புதிய தொழில் துறை கொள்கை  உற்பத்தி துறை வளர்ச்சி, தொழில் நுட்ப பரிமாற்றம்(Foreign Technology Transfer) ஆகியவற்றை அதிகரித்து வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும். வளரும் தொழில்நுட்பங்களான எந்திரினியல்(Robotics), செயற்கை நுண்ணரிவு(Artificial Intelligence), இனணயம் சார்ந்த தொழில் நுட்பங்கள்(Internet of things) ஆகியவற்றை ஊக்கப்படுத்த தேவையான சலுகைகள் வழங்கப்படும். வளர்ந்து வரும் துறைகள் ஊக்கப்படுத்துப்பட்டு புதுமையான தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படும். தற்போது இருக்கும் ஒழுங்கு முறை தடைகள் சரிசெய்யப்படும்.


புதிய தொழில் துறை கொள்கை வரைவு


கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டு வரப்பட்ட புதிய தொழில் துறை கொள்கை(வரைவு) ,அடுத்த 10  ஆண்டுகளில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவும் ,100 பில்லியன் நேரடி அந்நிய முதலீடுகளை ஈர்க்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.1956 ,1991 ஆண்டுகளில்  கொண்டுவரப்பட்ட தொழில் துறை கொள்கைக்கு பிறகு கொண்டுவரப்படும் தொழில் துறை கொள்கை இது. தற்போது உற்பத்தி துறை ஒட்டு மொத்த ஜி.டி.பி யில் 16-17%  பங்களிக்கிறது. 2020 ல் ஒட்டு மொத்த ஜி.டி.பியில் 20% பங்களிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


விவசாய ஏற்றுமதி கொள்கை


கடந்த 07 டிசம்பர் 2018, மத்திய அமைச்சரவை விவசாய ஏற்றுமதி கொள்கைக்கு ஒப்பதல் அளித்தது. பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் இயற்கை உணவு பொருட்கள் மீதான கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. விவசாய ஏற்றுமதி கொள்கை 2018 ன்படி விவசாய ஏற்றுமதியை 30 பில்லியன் டாலரிலிருந்து 60 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்ட்டுள்ளது. மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு 07 டிசம்பர் 2018 அளித்துள்ள பேட்டியில் புதிய ஏற்றுமதி கொள்கை, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், இயற்கை உணவு பொருட்கள் ஆகியவற்றிற்கான ஏற்றுமதி ஊக்குவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். விவசாய பொருட்கள் ஏற்றுமதிக்காக வெவ்வேறு மாநிலங்களில் 50 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வாழை,மாதுளம்,மாம்பழம், திராட்சை, அண்ணாச்சி பழம், ஆப்பிள், லிட்ச்சி, ஆரஞ்சு,வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு,டீ,காபி,இஞ்சி,ரப்பர், கடுகு ஆகிய உணவு பொருட்களுக்கு ஏற்றுமதிக்காக பல இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.


என்.ஏ.பி.சி.பி (NABCB National accreditation board  for certification bodies)


ஆய்வு மற்றும் தரச்சான்றிதழ் வழங்கும் ஆனணயங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வாரியமாக என்.ஏ.பி.சி.பி விளங்குகிறது. ஆசிய பசிபிக் பகுதிகளுக்கு ஏற்றுமதிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் உரிமையை தற்போது பெற்றுள்ளது.இதனால் ISO 45001  தரச்சான்றிதழ் பெற்ற வர்த்தகங்கள் அனைத்தும் அங்கீகாரம் பெறும். இதனால் முதலில் பயன் பெற போவது  இந்தியா.மேலும் என்.ஏ.பி.சி.பி அங்கீகாரம் செய்யும் எந்தவொரு பொருளுக்கும் உலக அரங்கில் எளிதாக ஏற்றுமதி செய்யப்படும்


மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதியையும் ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகள்


இந்தியாவில் மருத்துவ உபகரணங்கள் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியையும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு ஆனணயம் (National Medical Devices Promotion Council)அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு 14 டிசம்பர் 2018 அன்று விசாகப்பட்டினத்தில் நடந்த மருத்துவம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மாநாட்டில் அறிவித்தார். இதனால் மருத்துவ உபகரணங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் என தொழில் முனைவோரிடையே நம்பிக்கை எழுந்து உள்ளது.


உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு சிறந்த நாடாக விளங்கும் இந்தியா


கடந்த 18 டிசம்பர் 2018, இந்தியா டர்க்கி வர்த்தக தொடர்பான கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு மத்திய அரசு ஏற்றுமதியில் 12 துறைகளை தேர்வு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். விமான போக்குவரத்து துறை 20% சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அடுத்த பத்தாண்டுகளில் நூற்றிற்க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் 65 பில்லியன் டாலர் முதலீட்டில் கட்டப்படும் என தெரிவித்தார். மேலும் இந்தியாவில் விமானங்கள் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்ககைகளை அரசு எடுத்து வருவதாக கூறினார்.


கடந்த 21 டிசம்பர் 2018 அன்று எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்ய விரும்புவதை பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு பேசுகையில் அடுத்த மாதம் ஆப்பிள் நிறுவன தலைமை அதிகாரிகளோடு டேவோஸ்ஸில் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆப்பிள் இந்தியாவில் உற்பத்தி செய்ய தொழிற்சாலைகளை அமைக்க சரியான தருணம் இது என்று கூறினார்.


நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைகள் 


கடந்த 19டிசம்பர் 2018 அன்று சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான உச்சிமாநாட்டில் பேசிய சுரேஷ் பிரபு அவர்கள் சிறு குறு நிறுவனங்கள் ஏற்றுமதி செய்ய 15 நாடுகளில் ஊக்குவிக்கும் பொருட்டு  வாரியங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த துறையை ஊக்கப்படுத்த தேவையான காப்புரிமை(patent) சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார். மத்திய அரசின் இந்த முனைப்பான நடவடிக்கையால் தொழில் துறையில் இந்தியா சிறந்து விளங்குகிறது


Next Story