Top
undefined
Begin typing your search above and press return to search.

பீகாரில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவும், ஐக்கிய ஜனதாதளமும் தலா 17 தொகுதிகளில் போட்டி

பீகாரில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவும், ஐக்கிய ஜனதாதளமும் தலா 17 தொகுதிகளில் போட்டி

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  23 Dec 2018 5:44 PM GMT

பீகாரில் பா.ஜ.க ஆதரவுடன் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளத்துடன் கூட்டணி ஆட்சி சுமூகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வரும் 2019 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் பீகாரில் பா.ஜ.க - ஐக்கிய ஜனதாதள கூட்டணி இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் பா.ஜ.க தலைவர் அமித் ஷாவை நிதிஷ்குமார் மற்றும் ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோர் சந்தித்து பேசி தொகுதி பங்கீட்டை இறுதி செய்தனர்.

அதன்படி பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தலா 17 தொகுதிகளில் போட்டியிட உள்ளன. மற்றொரு கூட்டணி கட்சியான ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிக்கு  தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சிகளும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Next Story