Top
undefined
Begin typing your search above and press return to search.

குஜராத் மாநில இடைத்தேர்தலில் 19,985 வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க அமோக வெற்றி

குஜராத் மாநில இடைத்தேர்தலில் 19,985 வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க அமோக வெற்றி

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  24 Dec 2018 5:53 PM GMT

குஜராத் மாநிலம் ஜஸ்டன் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் கன்வர்ஜி பவாலியா காங்கிரஸ் வேட்பாளரை விட அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.



குஜராத்தில் காங்கிரஸ் மூத்த தலைவராக கன்வர்ஜி பவாலியா இருந்து வந்தார். ஜஸ்டன் தொகுதியில் 5 முறை நின்று வெற்றி பெற்றவர். ஒரு முறை நாடாளுமன்ற எம்.பி யாகவும் இருந்துள்ளார். சமீபத்தில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்தார். மேலும் எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். இதனையடுத்து ஜஸ்டன் தொகுதிக்கு கடந்த 20-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. பாஜக சார்பில் கன்வர்ஜி பவாலியாவும், காங்கிரஸ் சார்பில் அவ்சார் நஹியா போட்டியிட்டனர்.



இந்நிலையில் நேற்று  வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.  மொத்த வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் பா.ஜ.க வேட்பாளர் கன்வர்ஜி பவாலியா 19 ஆயிரத்து 985 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Next Story