Kathir News
Begin typing your search above and press return to search.

பாண்டிச்சேரியில் தலைகீழாக தொங்கும் சட்ட ஒழுங்கு ! தூங்கும் நாராயணசாமி ! மக்கள் பரிதாபம்

பாண்டிச்சேரியில் தலைகீழாக தொங்கும் சட்ட ஒழுங்கு ! தூங்கும் நாராயணசாமி ! மக்கள் பரிதாபம்

பாண்டிச்சேரியில் தலைகீழாக தொங்கும் சட்ட ஒழுங்கு ! தூங்கும் நாராயணசாமி ! மக்கள் பரிதாபம்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Dec 2018 9:43 AM GMT

பாண்டிச்சேரியில் போலீசாருக்கு சுதந்திரம் இல்லாததால் அடிக்கடி கொலை சம்பவங்கள் நடப்பதாகவும், கஞ்சா விற்பனை கொடிகட்டி பறப்பதாகவும், லாட்டரி விற்பனையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முதல்வர் நாராயணசாமியால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தனது அறிக்கையில் கூறியுள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கவர்னரின் வாய்மொழி உத்தரவு செல்லாது என்று கூறி உள்ளதை புதுச்சேரி பாரதீய ஜனதா வன்மையாக கண்டிக்கிறது. நடைமுறையில் உள்ள சட்டத்தை காவல்துறை மற்றும் அனைத்து அரசுத் துறைகளும் செயல்படுத்துவதற்கான உத்தரவு எந்த வடிவில் இருந்தால் என்ன? சட்டத்தை நடைமுறைப்படுத்துவதுதான் அரசு அதிகாரிகளின் வேலை. அதனை தடுப்பதற்கு முதல்-அமைச்சருக்கு என்ன உரிமை உள்ளது? புதுச்சேரி காவல்துறை முதல்-அமைச்சரின் சொல்படி நடப்பதற்கு அல்ல. சட்டம்-ஒழுங்கு காவல்துறையின் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டும். ஆனால் தற்போது அது நாராயணசாமி கையில் உள்ளது.
காவல்துறை சுதந்திரமாக செயல்பட அவர் தடையாக உள்ளார். இதனால் நேர்மையான அதிகாரிகள் தங்களது பணியை சரிவர செய்ய முடியவில்லை. அவர்கள் முறையான காரணமின்றி பணியிட மாற்றம் செய்யப் படுகிறார்கள். புதுவையில் ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்படாததால், விபத்தில் ஹெல்மெட் இன்றி பயணம் செய்வோர்களின் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும் அனைத்து தொகுதிகளிலும் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை அதிக அளவில் நடைபெறுவதால் தொழிலாளர்கள் அதற்கு அடிமையாக கடனாளியாக மாறும் நிலைமை உள்ளது.
கல்லூரி மற்றும் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. முதல்-அமைச்சரின் தொகுதியான நெல்லித்தோப்பில் ஒரு இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அதேதொகுதியில் கடந்த மாதம் இரட்டைக்கொலை நடந்துள்ளது. பொது இடங்களையெல்லாம் மது அருந்தும் கூடாரமாக சமூக விரோதிகள் மாற்றி வருகின்றனர்.


அனுமதியின்றி நடத்தப்படும் தங்கும் விடுதிகளில் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. ஆறு மற்றும் ஏரிகளில் மணல் கொள்ளை தடுக்கப்படவில்லை. இவற்றை எல்லாம் கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்த கவர்னரின் உத்தரவு வாய்மொழியாக இருந்தாலே போதும். மத்திய உள்துறை கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அனைத்து அரசுத்துறைகளையும் நிர்வகிக்கும் நிர்வாகியே கவர்னர்தான்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News