Top
undefined
Begin typing your search above and press return to search.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகத்தால் எதையும் செய்யமுடியாது : மத்திய அமைச்சர் நிதின் கட்காரி திட்டவட்டம்

மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகத்தால் எதையும் செய்யமுடியாது :  மத்திய அமைச்சர் நிதின் கட்காரி திட்டவட்டம்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  24 Dec 2018 7:39 AM GMT

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க எம்.பி.,யும், லோக்சபா துணை தலைவருமான தம்பிதுரை அவர்களுக்கும், தி.மு.க எம்.பி., கனிமொழி ஆகியோருக்கும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கடிதம் அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்டப்படாது. காவிரி டெல்டா விவசாயிகளின் நலனில் மத்திய அரசு முழு அக்கறை கொண்டுள்ளது. தமிழகத்தின் அனுமதி இல்லாமலும், அவர்களின் நலனிற்கு எதிராகவும் எந்த நடவடிக்கையும் கர்நாடகாவால் எடுக்க முடியாது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மேகதாது அணை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கூட்டத் தொடரை சுமூகமான முறையில் நடத்தவும், எம்பி.,க்கள் போராட்டத்தை கைவிட செய்வதற்காகவும் மத்திய அரசு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில் மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமாரும் தெரிவித்துள்ளார்.

( Inputs from Dinamalar)
Next Story