Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழர்களைக் கொன்ற சேடிஸ்ட் சோனியாவை பக்கத்தில் வைத்துக் கொண்டு பிரதமர் மோடியை சேடிஸ்ட் எனக் கூறுவதா? ஸ்டாலினுக்கு தமிழிசை சரமாரி கேள்வி

தமிழர்களைக் கொன்ற சேடிஸ்ட் சோனியாவை பக்கத்தில் வைத்துக் கொண்டு பிரதமர் மோடியை சேடிஸ்ட் எனக் கூறுவதா? ஸ்டாலினுக்கு தமிழிசை சரமாரி கேள்வி

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  24 Dec 2018 6:50 AM GMT

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 19.5 சதவீதம் வாக்குகளை பெற்ற கட்சி பா.ஜ.க என்றும், பா.ஜ.க.வை ஒழித்துவிட்டதாக கூறும் மு.க.ஸ்டாலினால் பா.ஜ.க.வை முடக்கவும், அடக்கவும் முடியாது. பிரதமர் நரேந்திர மோடியை வேண்டும் என்றே தமிழகத்தில் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க.வை ஒழித்துவிட்டதாக மு.க.ஸ்டாலின் சொல்கிறார். தமிழகத்தில் இனி தான் பா.ஜ.க. விஸ்வரூபம் எடுக்கப்போகிறது. நீங்களா? நாங்களா? என்று பார்த்துவிடுவோம். தமிழகத்தில் பா.ஜ.க.வை மு.க.ஸ்டாலினால் முடக்கவும், அடக்கவும் முடியாது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 19.5 சதவீதம் வாக்குகளை நாங்கள் பெற்றிருக்கிறோம்.

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியா? நாங்களா? என்று பார்த்துவிடுவோம். லட்சக்கணக்கான தமிழர்களை கொன்றுகுவித்த ‘சாடிஸ்ட்’ மனப்பான்மை கொண்ட சோனியா காந்தியை மேடையில் வைத்துக்கொண்டு பிரதமரை ‘சாடிஸ்ட்’ என்று மு.க.ஸ்டாலின் சொல்கிறார். தற்போது மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த (ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர்) மிகப்பெரிய திட்டம் நிச்சயம் தோல்வியில் முடிய போகிறது. எனவே மு.க.ஸ்டாலின் ‘சேடஸ்ட்’ ஸ்டாலின் என்று அழைக்கப்படுவார். இவ்வாறு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
( Inputs from Dinathathi )
Next Story