Top
undefined
Begin typing your search above and press return to search.

தொழில்நுட்ப ரீதியான குற்றங்களை தடுக்க புதிய இணையதளத்தை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி

தொழில்நுட்ப ரீதியான குற்றங்களை தடுக்க புதிய இணையதளத்தை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  24 Dec 2018 5:40 PM GMT

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் காவல்துறை டி.ஜி.பி-க்களுக்கான 3 நாள் மாநாடு ஞாயிறு அன்று நடைபெற்றது. மாநாட்டில், கணினி மூலமாக மேற்கொள்ளப்படும் பணமோசடி உள்ளிட்ட குற்றங்களை (சைபர் கிரைம்) தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, கணினி குற்றங்களை தடுப்பது குறித்த புதிய இணையதளத்தை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர், ‘இந்த இணையதளம் மூலமாக அனைத்து கணினி மூலமாக நடத்தப்படும் குற்றங்களை அறிந்து கொள்ள முடியும். சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் காவல்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நவீன தொழில்நுட்பமான இணையதளம், செயலிகள் (ஆப்) மூலமாக காவல்துறை பற்றிய தகவல்களையும், குற்றச் செயல்களை தடுப்பது குறித்தும் அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ள செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு சைபர் கிரைம்’ எனப்படும் இணைய தள குற்றங்களை தடுக்க 1200 தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மத்திய அரசு பயிற்சி அளிக்கவுள்ளதாக கூறியது குறிப்பிடத்தக்கது. உலகின் பல நாடுகளில் இணையதள குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.  பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் நடந்த இணையதளக் குற்றத்தால் சுமார் 10 லட்சம் கணினிகள் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டன. பிரிட்டனில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கு ஒருமுறை இணையதளக் குற்றம் நடைபெறுகிறது. இதனால், அந்நாட்டு அரசு தமது காவல்துறையில் 80 சதவீதம் பேருக்கு சைபர் கிரைம் புலனாய்வுக்கான பயிற்சி அளிக்கவுள்ளது. இதுபோன்ற குற்றங்கள் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதைச் சமாளிக்க மத்திய அரசு அனைத்து தரப்பின் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்தது.
இதற்காக தேசிய அளவில் ‘இணயதள பாதுகாப்பு மிக்க இந்தியா’ (சைபர் சுரக் ஷித் பாரத்) என்ற திட்டதை விரைவில் அறிமுகப்படுத்துகிறது. தேசிய குற்றப் பதிவு மையத்தின் புள்ளிவிவரப்படி கடந்த 2011 முதல் 2014-ம் ஆண்டு வரை இணையதளக் குற்றங்கள் சுமார் 300 சதவீதம் அதிகரித்துள்ளன. இந்த அதிகரிப்பு 2013 முதல் 2014 வரை மட்டும் 70 சதவீதமாக உள்ளது. 2015-ல் பாதுகாப்பு தொடர்பான 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணையதள குற்றங்களை மத்திய அரசின் தேசிய தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தின் கீழ் செயல்படும் ‘இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்ஸி ரெஸ்பான்ஸ் டீம்’ சமாளித்துள்ளது. இது தொடர்பாக ‘ஐடி சட்டம் 2000’-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் பிரதமர்  கம்ப்யூட்டர் குற்றங்களை தடுக்க புதிய இணையதளத்தினை  தொடங்கி வைத்தது வரவேற்கதக்கது.
Next Story