Top
undefined
Begin typing your search above and press return to search.

பஹ்ரைன் நாட்டில் கொத்தடிமையாக அடைத்து வைக்கப்பட்ட இந்திய பெண் அதிரடி மீட்பு : மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் துரித நடவடிக்கை

பஹ்ரைன் நாட்டில் கொத்தடிமையாக அடைத்து வைக்கப்பட்ட இந்திய பெண் அதிரடி மீட்பு : மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் துரித நடவடிக்கை

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  24 Dec 2018 7:04 PM GMT

பொய்யான ஏஜண்டுகள் தரும் நம்பிக்கையின் பேரில் இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பல பெண்கள் அங்கு அனுபவிக்கும் சித்ரவதைகள் மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது. இந்நிலையில், பஹ்ரைன் நாட்டில் வேலைக்காக சென்ற பெண்ணை அரேபிய செல்வந்தர் ஒருவர் தனது வீட்டில் கொத்தடிமையாக அடைத்து வைத்து, சித்ரவதை செய்வதாக அங்குள்ள தொண்டு நிறுவனத்துக்கு சமீபத்தில் தகவல் வந்தது.
அந்த தகவலை அவர்கள் பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதைதொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்கும் நடவடிக்கையில் தூதரக அதிகாரிகள் துரிதமாக களமிறங்கினர்.
இதற்கிடையில், தன்னிடம் சிக்கிய பெண்ணின் குடும்பத்தாருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட அந்த அரேபிய செல்வந்தர், அந்த பெண்ணுக்காக நான் ஏகப்பட்ட பணத்தை கொடுத்திருக்கிறேன். இன்னும் 25 நாளாவது அவளை என்னுடன் வைத்திருப்பேன். அவளை மீட்க உங்களால் என்ன செய்ய முடியுமோ, செய்து கொள்ளுங்கள் என்று சவால் விட்டார்.
இதுதொடர்பாக, பஹ்ரைன் நாட்டின் தொழிலாளர் நல அமைச்சக அதிகாரிகளை தொடர்பு கொண்ட இந்திய தூதரக அதிகாரிகள் போலீசார் துணையுடன் அந்த அராபிய செல்வந்தரின் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து அங்கு கொத்தடிமை போல் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்திய பெண்ணை மீட்டனர். இந்த சம்பவத்தில் விரைவாக நடவடிக்கை எடுத்த இந்திய தூதரக அதிகாரிகளுக்கும், தகவல் கொடுத்த தொண்டு நிறுவனத்துக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
Next Story