Top
undefined
Begin typing your search above and press return to search.

டெல்லி, உத்திர பிரதேசத்தில் புதிதாக தொடங்கிய இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்தினர் 10 பேர் கைது: 100 செல்போன்கள், 135 சிம் கார்டுகள் பறிமுதல்

டெல்லி, உத்திர பிரதேசத்தில் புதிதாக தொடங்கிய இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்தினர் 10 பேர் கைது: 100 செல்போன்கள், 135 சிம் கார்டுகள் பறிமுதல்

SG SuryahBy : SG Suryah

  |  26 Dec 2018 11:36 AM GMT

உத்தர பிரதேசம் மற்றும் டெல்லியில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத ஆதரவு இயக்கமான ஹர்கத் உர் ஹர்ப் இ இஸ்லாம் அமைப்பை சேர்ந்த 10 பேர் கைதாகினர்.
சிரியா மற்றும் ஈராக்கில் முன்னர் கொலைவெறி தாக்குதல்களில் ஈடுபட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தினருக்கு இந்தியாவில் சிலர் மறைமுகமாக ஆதரவு திரட்டி, ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உத்தர பிரதேசம் மற்றும் டெல்லியில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பத்து பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் 5 பேர் உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தில் பிடிபட்டுள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை போன்று செயல்பட ஹர்கத் உல் ஹர்ப் இ இஸ்லாம் எனும் அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பை 4 மாதங்களுக்கு முன்னர் துவக்கி குண்டு வெடிப்புகளுக்கு திட்டமிட்டு வந்துள்ளனர். இவர்களிடமிருந்து 100 செல்போன்கள், 135 சிம் கார்டுகள், லேப்டாப், மெமரி கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சோதனையின் போது ₹7.5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Next Story