Top
undefined
Begin typing your search above and press return to search.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை உயர் நீதிமன்றத்தில் உறுதி

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை உயர் நீதிமன்றத்தில் உறுதி

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  25 Dec 2018 7:07 PM GMT





மும்பையில் கடந்த 2006-ம் ஆண்டு மின்சார ரெயில்களில் தொடர்ச்சியாக வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 190 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உலகை உலுக்கிய இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மராட்டிய பயங்கரவாத தடுப்பு படையினர் விசாரணை நடத்தி 12 பேரை கைது செய்தனர். மேலும் மோக்கா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது.

 

ஆர்.டி.எக்ஸ் குண்டுகள்:


மும்பையை அதிரவைத்த இந்த பயங்கர சம்பவம் 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்றது. மும்பை புறநகர் ரயில்களில் முதல் வகுப்பு பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த ஆர்.டி.எக்ஸ் ரக குண்டுகள் வெடித்தன. மாதுங்கா ரோடு, மாஹிம், பாந்த்ரா, கர் ரோடு, ஜோகேஷ்வரி, போரிவிலி, மீரா ரோடு ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்த நேரத்தில் மாலை 6.23 மணிக்கு தொடங்கி 10 நிமிட இடைவெளியில் 7 ரயில்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.இந்த வழக்கு விசாரணை மகாராஷ்டிர சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.


192 சாட்சிகள்


8 ஆண்டு நீடித்த விசாரணையில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள், 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், 18 டாக்டர்கள் உட்பட 192 சாட்சிகளிடம் அரசு தரப்பில் விசாரிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் 51 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். சாட்சிகள் கொடுத்த வாக்குமூலம் சுமார் 5,500 பக்கங்கள் இருந்தது. தீவிர விசாரணைக்குப் பிறகு 12 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அப்துல் வாஹித் சாஹிப் என்பவர் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளார்.


இதில் குற்றம் சுமத்தப்பட்ட 5 பேருக்கு தூக்கு தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதில் ஆயுள் தண்டனை பெற்ற முகமது சாஜித் அன்சாரி என்பவர் தனது தண்டனையை ரத்து செய்யக்கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை நிறைவில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது குற்றவாளி முகமது சாஜித் அன்சாரிக்கு சிறப்பு கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.





Next Story