Top
undefined
Begin typing your search above and press return to search.

பூங்காவில் தொழுகை நடத்த கூடாது - உத்திர பிரதேச போலீஸ் எச்சரிக்கை

பூங்காவில் தொழுகை நடத்த கூடாது - உத்திர பிரதேச போலீஸ் எச்சரிக்கை

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  26 Dec 2018 7:04 AM GMT

உத்தர பிரதேச மாநிலத்தின் தொழில் நகரமான, நொய்டாவில் உள்ள பூங்காவில், தொழுகைகள் செய்தால் அவர்கள் சார்ந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் தொழில் நகரமான நொய்டாவில் செக்டார் - 58-ல் உள்ள பூங்காவில் வெள்ளிக்கிழமைகளில், முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடுகின்றனர். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் இந்தப் பூங்காவில் தொழுகைகள் நடத்தக் கூடாது என போலீஸ் கூறியுள்ளது. இது தொடர்பாக, அங்குள்ள நிறுவனங்களுக்கு, போலீஸ் தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், "நிறுவன ஊழியர்கள் பூங்காவில் தொழுகையில் ஈடுபட்டால், நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு எழுந்ததையடுத்து, இந்தப் பூங்காவில், "எந்த மதத்தினரும், நிகழ்ச்சிகள், பிரார்த்தனைகள் நடத்தக் கூடாது என, உத்தரவு திருத்தப்பட்டது."
இது குறிப்பிட்ட சமுதாயத்துக்கு எதிரான உத்தரவு அல்ல. மத நல்லிணக்கத்தை உறுதி செய்யும் வகையிலேயே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என, போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story