Kathir News
Begin typing your search above and press return to search.

மேற்கு வங்கத்தில் இரண்டு சகோதரர்களைக் கொன்று, தாயின் வாயில் மகன்களின் இரத்தம் கலந்த சோற்றை திணித்து கொடுமைப்படுத்திய கம்யூனிஸ்ட் தலைவர் காலமானார்

மேற்கு வங்கத்தில் இரண்டு சகோதரர்களைக் கொன்று, தாயின் வாயில் மகன்களின் இரத்தம் கலந்த சோற்றை திணித்து கொடுமைப்படுத்திய கம்யூனிஸ்ட் தலைவர் காலமானார்

மேற்கு வங்கத்தில் இரண்டு சகோதரர்களைக் கொன்று, தாயின் வாயில் மகன்களின் இரத்தம் கலந்த சோற்றை திணித்து கொடுமைப்படுத்திய கம்யூனிஸ்ட் தலைவர் காலமானார்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Dec 2018 7:46 AM GMT

மேற்கு வங்காளத்தில் பர்தமன் நகரம் அருகே சயின்பரி கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரணாப் சையின், மோலாய் சையின், இருவரும் சகோதரர்கள். இவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். பல ஆண்டுகளாக கட்சிக்கு விசுமானவர்களாக இருந்து வந்தனர். இவர்களை அந்த பகுதியில் உள்ள இடதுசாரிகள் காங்கிரசிலிருந்து விலகி தங்கள் கட்சிக்கு வந்துவிடுமாறு நீண்ட காலமாக வற்புறுத்தி வந்தனர். ஆனால் அவர்கள் இடதுசாரிகளின் பேச்சைக் கேட்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த இடதுசாரிகள் கட்சியினர் நிருபம் சென் என்கிற அப்பகுதி கட்சி தலைவருடன் சையின் சகோதரர்கள் வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கிருந்த சகோதரர்கள் இருவரின் தலையை இரத்தம் சொட்ட, சொட்ட தனியாக வெட்டி எடுத்தனர். சகோதரர்கள் இருவரின் தாய் மிரிகாயணி கண்ணெதிரிலேயே இந்த சம்பவம் நடைபெற்றது.
சகோதரர்களின் இரத்தத்தை ஒரு பாத்திரத்தில் பிடித்த அவர்கள் சாதத்தில் ரத்தத்தை கலந்து மிரிகாயணி வாயில் திணித்து வலுக்கட்டாயமாக ஊட்டினர். அதன் பிறகு அந்த வீட்டையே தீ வைத்து கொளுத்தி விட்டனர். இந்த சம்பவம் கடந்த 1970-ஆம் ஆண்டு மார்ச் 17-ம் தேதி நடைபெற்றது. நாட்டையே அதிர வைத்த இந்த சம்பவம் அனைத்து மாநில பத்திரிக்கைகளிலும் பரபரப்பாக வந்தது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு சயின்பரி கிராமத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நேரில் விசாரித்தார்.
அங்கு கம்யூனிஸ்ட் அரசு என்பதால் வழக்குகள் பதியப்பட்டும் குற்றவாளிக்கு சரியான தண்டனை வழங்கப்படவில்லை. இந்த நிலையில் சகோதரர்களைக் கொன்று அவர்களை பெற்ற தாயின் வாயில் இரத்த சோறு ஊட்டிய கொடூர குற்றவாளி நிரூபம் சென்னுக்கு பின்னாளில் மத்திய கமிட்டி உறுப்பினர் பதவி அளித்து அழகு பார்த்தது இரத்தவெறி பிடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. பின், மேற்கு வங்க இடது முன்னணி அரசில் தொழில் துறை அமைச்சராக செயல்பட்டார்.
கொல்லப்பட்ட சகோதரர்களின் உடன் பிறந்த சகோதரி ஸ்வர்ணலதா பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில் "அந்த சம்பவத்தை பற்றி நினைத்தாலே குலை நடுங்குகிறது. வீட்டை சுற்றிலும் நின்று கொளுத்திய அவர்கள் எனது அண்ணன் மார்களின் உடலை எரியும் வீட்டிற்குள் தூக்கிப் போட்டனர், மிக பயங்கரமான சம்பவம் அது" என்றார்.
இந்நிலையில், நிருபம் சென் உடல்நலக் குறைவால் கொல்கத்தாவில் நேற்று காலமானார். 48 ஆண்டுகள் கடந்தும் இன்றும் கூட வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் ரத்த வெறியாட்டத்தின் அடையாளமாக கருதப்படுகிறது சயின்பரி சகோதரர்கள் கொலை.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News