Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐயப்பன் புனிதம் காக்க 850 கி.மீ நீளம் சாலையில் கையில் விளக்குடன் திரண்ட பெண்கள்: கேரள அரசை மிரள வைத்த ஐயப்ப ஜோதி

ஐயப்பன் புனிதம் காக்க 850 கி.மீ நீளம் சாலையில் கையில் விளக்குடன் திரண்ட பெண்கள்: கேரள அரசை மிரள வைத்த ஐயப்ப ஜோதி

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  27 Dec 2018 11:35 AM GMT

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சடங்குகள், மரபுகள், ஐயப்பனின் புனிதம் காக்கக் கோரி இலட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் கையில் விளக்கேந்தி காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை 850 கி.மீ நீளம் சாலையோரம் நின்று பிரார்த்தனை செய்தனர். இந்த பிரார்த்தனையில் பல பிரபல மலையாள நடிகர்கள், நடிகைகளும் பங்கேற்றனர்.
சபரிமலை கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது. அந்த தீர்ப்பை அமல்படுத்துவதில் கேரள அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் பெண்களை அனுமதிப்பது ஐயப்பன் கோவிலின் ஆச்சார விதிகளை மீறுவதாகும் என்று கூறி பல்வேறு இந்து அமைப்புகளும், பாரதீய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17-ம் தேதி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. சாமி தரிசனத்துக்கு வந்த பெண்களை ஆங்காங்கே ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் சில இடங்களில் போலீசாருக்கும், பக்தர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த போராட்டத்தை தொடர்ந்து சபரிமலை, சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. பக்தர்கள் போராட்டம் காரணமாக அங்கு அடிக்கடி பதற்றம் ஏற்பட்டுவருகிறது.
இந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சபரிமலை கர்ம சமிதி என்ற அமைப்பினர் கைவிளக்கு ஏந்தி ஐயப்ப ஜோதியின் மூலம் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி இலட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் கையில் விளக்கேந்தி காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை 850 கி.மீ நீளம் சாலையோரம் நின்று பிரார்த்தனை செய்தனர். இந்த பிரார்த்தனையில் பல பிரபல மலையாள நடிகர்கள், நடிகைகளும் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்துக்கு பாஜக உட்பட பல்வேறு வலதுசாரி அமைப்புகளும், பந்தள ராஜ குடும்பத்தினரும், நாயர் சமுதாயத்தினரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். கன்னியாகுமரி வரை தமிழக பகுதிகளில் குமரி மாவட்ட பாஜக அமைப்புகள், இந்து அமைப்புகள் இந்த ஜோதி நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்திருந்தனர்.
Next Story