Top
undefined
Begin typing your search above and press return to search.

அயோத்தி பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள்

அயோத்தி பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள்

SG SuryahBy : SG Suryah

  |  26 Dec 2018 7:22 PM GMT





அயோத்தி பிரச்சினை குறித்து உச்ச நீதிமன்றம் விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சர்  ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அகில பாரதீய வழக்கறிஞர்கள் கவுன்சிலின் 15–வது தேசிய மாநாட்டை மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடங்கிவைத்து பேசினார்.


அப்போது பேசிய அவர், அயோத்தி ராமஜென்மபூமி பிரச்சினையை உடனடியாக தீர்த்துவைப்பதற்காக இதனை விரைவு நீதிமன்றம் போல விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் உச்ச நீதிமன்றத்துக்கு எனது வேண்டுகோளை விடுக்கிறேன். சபரிமலை கோவில் வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்கும்போது, ராமஜென்மபூமி பிரச்சினை மட்டும் ஏன் கடந்த 70 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. நாம் ஏன் பாபரை வணங்க வேண்டும். அரசியல்சாசனத்தில் ராமர், கிருஷ்ணர் ஏன் அக்பர் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பாபர் பற்றி குறிப்பிடப்படவில்லை. ஆனால் நாட்டில் நாம் இதுபோன்ற பிரச்சினைகளை பேசினால் ஒரு வித்தியாசமான சர்ச்சை உருவாகிறது.


எதிர்காலத்தில் நீதிபதிகளை நியமிப்பதற்காக அகில இந்திய நீதி சேவைகள் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். வழக்கறிஞர்கள் கவுன்சில் உறுப்பினர்கள் ஏழைகள் மற்றும் தேவையுள்ள மக்கள் தொடர்பான வழக்குகளை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உறுதி அளிக்க வேண்டும் ' என்று கூறினார். ராமஜென்மபூமி பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 14 மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்த 3 நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





Next Story