Top
undefined
Begin typing your search above and press return to search.

உத்தரபிரதேச மாநில தலைமைச்செயலகத்தில் 25 அடி உயர வாஜ்பாய் சிலை

உத்தரபிரதேச மாநில தலைமைச்செயலகத்தில் 25 அடி உயர வாஜ்பாய் சிலை

SG SuryahBy : SG Suryah

  |  26 Dec 2018 7:15 PM GMT

அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், நமது சுதந்திர இந்தியாவின் 10வது பிரதம மந்திரியாக பதவி வகித்தவர். பல ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், 3 முறை பிரதம மந்திரி பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், முன்னாள் ஜன சங்கம் அரசியல் கட்சியை (இன்றைய பாரதிய ஜனதா கட்சி) நிறுவினார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த அவர், பாரதிய ஜனதா கட்சியின் ஆணிவேரென்று கட்சி உறுப்பினர்களால் அழைக்கப்படுகிறார்.



இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருதை வென்ற அவர், ஒரு சிறந்த கவிஞரும் கூட. அவர், ‘ட்வென்டி-ஒன் போயம்ஸ்’, ‘க்யா கோயா க்யா பாயா: அடல் பிஹாரி வாஜ்பாய், வ்யக்தித்வா அவுர் கவிதம்’, ‘மேரி இக்யாவனா கவிதம்’, ‘ஸ்ரேஷ்ட கபிதா’, எனப் பல கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். ‘லோகமான்ய திலகர் விருது’, ‘சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது’, ‘பாரத ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப பந்த் விருது’ எனப் பல விருதுகளை வென்றுள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த  வாஜ்பாய்  அவர்களின் 94–வது பிறந்த நாள் விழா உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் செவ்வாயன்று நடந்தது.



மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கவர்னர் ராம் நாய்க் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு வாஜ்பாயின் பெருமைகளை குறிப்பிட்டு பேசினார்.அப்போது அவர் கூறுகையில், ‘உத்தரபிரதேச மாநிலத்தில் மறைந்த பிரதமர் வாஜ்பாய் பெயரில் செயல்படுத்தப்பட உள்ள பல்வேறு திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் மாநில தலைமைச் செயலகத்தில் வாஜ்பாயின் 25 அடி உயர சிலை நிறுவப்படும்’ என்றார்.

Next Story