Top
undefined
Begin typing your search above and press return to search.

2வது கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ₹4,300 கோடி : ஜப்பான் கடனுதவி

2வது கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ₹4,300 கோடி : ஜப்பான் கடனுதவி

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  27 Dec 2018 7:23 PM GMT





சென்னையில் 2வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவுமுகமை (ஜெ.ஐ.சி.ஏ) கடனாக ₹4,300 கோடியினை வழங்க முன்வந்துள்ளது. இதற்காக இந்திய அரசுடன் ஒரு ஒப்பந்தத்தில் அது கையெழுத்திட்டுள்ளது.மத்திய அரசின், பொருளாதார தொடர்புகள் பிரிவின் கூடுதல் செயலாளர் டாக்டர். சி. எஸ். மோஹபத்ரா, ஜிகா இந்தியாஅலுவலகத்தின் தலைமை பிரதிநிதி கட்சுவோ மட்சுமோட்டோ ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.



இந்தக் கடன் தொகைக்கான வட்டியானது, கட்டுமான செயல்பாடுகளுக்கு 0.2 விழுக்காடு மற்றும் ஆலோசனை சேவைகளுக்கு 0.01 விழுக்காடு என மிக மிகக்குறைந்த வட்டி விகிதத்தைக் கொண்டதாகும். மேலும் திரும்பச் செலுத்துதல் கால கட்டமானது 40 ஆண்டுகள் (12 ஆண்டுகள் கருணை காலகட்டம் உட்பட) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓ.டி.ஏ. திட்டத்தின் கீழ் இரண்டாவது விரிவாக்கப் பணிகளுக்கு வழங்கப்படும் முதல் கடன் திட்டம்என்பதால் இந்தக் குறைவான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை பெருநகரப் பகுதியில் சாலை போக்குவரத்தினை குறைப்பதே இத்திட்டத்தின் இலக்காகும். மேலும் சாலை விபத்துகள் மற்றும் வாகன நெரிசலைகுறைக்க உதவுவதன் வழியாக, நகரின் போக்குவரத்து அமைப்புகளை மேம்படுத்துவதோடு, ஒரு சமநிலை கொண்ட சமூகப் - பொருளாதார மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும் என்று மத்திய அரசின், பொருளாதார தொடர்புகள் பிரிவின் கூடுதல் செயலாளர் டாக்டர். சி. எஸ். மோஹபத்ரா கூறினார்.






Next Story