Top
undefined
Begin typing your search above and press return to search.

ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம் உச்சகட்டம்: நீதிமன்றத்தில் சோனியா, ராகுல், அகமது படேல் பெயர்களை போட்டுக் கொடுத்தார் இடைதரகர் கிறிஸ்டியன் மைக்கேல்: காங்கிரஸ் வி.வி.ஐ.பி-க்கள் பீதி

ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம் உச்சகட்டம்: நீதிமன்றத்தில் சோனியா, ராகுல், அகமது படேல் பெயர்களை போட்டுக் கொடுத்தார் இடைதரகர் கிறிஸ்டியன் மைக்கேல்: காங்கிரஸ் வி.வி.ஐ.பி-க்கள் பீதி

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  29 Dec 2018 12:09 PM GMT

அகஸ்டா வெஸ்ட்லாந்து ஹெலிகாப்டர் கொள்முதல் ஊழல் விவகாரத்தில் கமிஷன் ஏஜண்டாக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் கமிஷன் பணம் கைமாறியது தொடர்பான இன்றைய கோர்ட் விசாரணையில் சோனியா, ராகுல், அகமது படேல் பெயர்களை குறிப்பிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முன்னணி ஆட்சி நடைபெற்றபோது சோனியா குடும்பத்தினர் உட்பட மிக முக்கியமானவர்கள் சொகுசாக பயணம் செய்வதற்காக ₹3,600 கோடியில் பிரிட்டனைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் பாதுகாப்புத்துறை சார்பில் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்காக உடன்பாடு செய்யப்பட்டது. இந்த உடன்படிக்கையில் தரகராகச் செயல்பட்ட துபாயை சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் இருந்து ₹360 கோடி கமிஷன் பெற்றதாகவும், இதில் 60 சதவீதம் தொகையான ₹225 கோடியை அவர் மட்டும் கமிஷனாக பெற்றதாகவும், மீதி தொகையை முக்கிய காங்கிரஸ் தலைவர் குடும்பத்துக்கு அளித்ததாகவும் சிபிஐயும் அமலாக்கத்துறையும் குற்றஞ்சாட்டின. 2010-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை இந்த விவகாரம் தொடர்பாக கிறிஸ்டியன் மைக்கேல் சோனியா காந்தியை சந்தித்து பேரம் பேசியது, 2012-ஆம் ஆண்டு வரை பலமுறை இவர் டெல்லி வந்து பாதுகாப்புத் துறை வட்டாரம் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் கொண்ட தொடர்புகள் குறித்தும் சி.பி.ஐ உரிய ஆதாரங்களை சமர்ப்பித்தது.
அவரை விசாரணைக்காக இந்தியா கொண்டுவருவதற்காகத் துபாய் நீதிமன்றத்தில் இந்தியா கேட்டுக்கொண்டது. இது தொடர்பான நீண்ட கால விசாரணைக்குப் பிறகு சில வாரங்களுக்கு முன்பு, துபாய் அரசாங்கம் அவரை நாடு கடத்தியது. தற்போது அவர் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் உள்ளார். அவரை ஜாமீனில் வெளியே கொண்டுவர இங்குள்ள காங்கிரஸ் பிரமுகர்கள் முயற்சித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்தன. சமீபத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் கிறிஸ்டியன் மைக்கேலின் மும்பை அலுவலக உதவியாளர் ஜே.பி பாலசுப்ரமணியத்திடம் இருந்து 28 தொலை நகல் அச்சுப் பிரதிகளை கைப்பற்றி விசாரித்ததாகவும், அதில் ஹெலிகாப்டர் பேரம் குறித்த இரகசியங்கள், கமிஷன் விவரங்கள், கமிஷன் பகிர்ந்த விவரங்கள் குறித்து தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டது. குறிப்பாக பல ஆவணங்களில் A.P. என குறிப்பிடப்பட்டிருந்தது. அது குறித்து விசாரித்தபோது A.P. என்பது அகமது படேலை குறிக்கும் என கிறிஸ்டியன் மைக்கேல் கூறியுள்ளார். இந்த விவரங்களை அடிப்படையாகக் கொண்டு கிறிஸ்டியன் மைக்கேலிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்ததும் இன்று அவர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இந்த விசாரணையில் அகமது படேல், சோனியா, ராகுல் உள்ளிட்டவர்களின் பெயர்களை கிறிஸ்டியன் மைக்கேல் கூறியுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக ஆங்கில நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் சோனியா, ராகுல் உட்பட காங்கிரஸ் வி.வி.ஐ.பி-களின் சாயம் விரைவில் வெளுக்கும் என்றும் கூறப்படுகிறது.
Next Story