Top
undefined
Begin typing your search above and press return to search.

விவசாயிகளுக்கு பலனளிக்கும் விதமாக பெப்சி, கோலா போன்ற குளிர்பானங்களில் 5 விழுக்காடு பழச்சாறு சேர்க்க கோரிக்கை

விவசாயிகளுக்கு பலனளிக்கும் விதமாக பெப்சி, கோலா போன்ற குளிர்பானங்களில் 5 விழுக்காடு பழச்சாறு சேர்க்க கோரிக்கை

SG SuryahBy : SG Suryah

  |  28 Dec 2018 8:49 PM GMT

விவசாயிகளின் வாழ்வை வளமாக்கும் வகையில், பெப்சி, கோலா போன்ற குளிர்பானங்களில், 5 விழுக்காடு அளவிற்கு பழச்சாறுகளை சேர்க்க கேட்டுக்கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். இமாச்சல் பிரதேசத்தில், ஜெய் ராம் தாக்கூர் தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்று, ஓர் ஆண்டு நிறைவடைந்திருப்பதை முன்னிட்டு, தர்மசாலாவில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,  வீடுகளின் மேற்கூரையை தங்கத்தால் வேய்வோம் என்றோ, வீட்டிற்கு ஒரு காரை நிறுத்துவோம் என்றோ, பொதுமக்களிடம் ஒருபோதும் வாக்குறுதிகளை அளித்ததில்லை என்றார்.



அவ்வாறு இனி ஒருக்காலும் வாக்குறுதி அளிக்கப் போவதில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார். உலகளவில், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நாடாக இந்தியா விளங்குவதாக குறிப்பிட்ட பிரதமர், கடந்த 2013ஆம் ஆண்டு 70 லட்சமாக இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, கடந்த 2017ஆம் ஆண்டு கணக்கின்படி, ஒரு கோடி பேராக அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.



முந்தைய ஆட்சியாளர்களால், 40 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை தமது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற உடன் அமல்படுத்தியதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்திருக்கிறார். விவசாயிகளின் வாழ்வை வளமாக்கும் வகையில், பெப்சி, கோலா போன்ற குளிர்பானங்களில், 5 விழுக்காடு அளவிற்கு பழச்சாறுகளை சேர்க்க கேட்டுக்கொண்டிருப்பதாகவும், அதற்கு பல குளிர்பான நிறுவனங்கள் இசைவு தெரிவித்திருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

Next Story