Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்தியாவின் அதிவேக ரயிலான டிரெய்ன் -18யை கொடியசைத்துத் தொடங்கி வைக்க இருக்கிறார் பிரதமர் மோடி

இந்தியாவின் அதிவேக ரயிலான டிரெய்ன் -18யை கொடியசைத்துத் தொடங்கி வைக்க இருக்கிறார் பிரதமர் மோடி

SG SuryahBy : SG Suryah

  |  28 Dec 2018 8:44 PM GMT

இந்தியாவின் அதிவேக ரயிலான  ட்ரெய்ன்-18-யை வரும் ஜனவரி மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைக்க இருக்கிறார். இந்தியாவின் அதிவேக ரயில் ட்ரெய்ன்-18 வரும் ஜனவரி மாதம் முதல் தனது சேவையைத் தொடங்க உள்ளது.தொடக்கத்தில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய இந்த ரயிலின் வேகத்தை படிப்படியாக அதிகரித்து மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.



அண்மையில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தமது டிவிட்டர் பக்கத்தில் இந்த ரயிலின் வீடியோ காட்சியை பதிவிட்டிருந்தார். அதில் அந்த ரயில் 180 கிலோமீட்டர் வேகத்தில் ஓடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ரயில்வே பாதுகாப்புத்துறை தலைமை ஆணையர் சான்றிதழ் அளித்த பின்னர் வரும் ஜனவரி மாதத்தில் பிரதமர் மோடி இந்த ரயிலை டெல்லியில் கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் சில இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என்று பாதுகாப்பு குழு பரிந்துரைத்துள்ளது. காலை 6.30 மணிக்கு  டெல்லியில் இருந்து புறப்படும் இந்த ரயில் பிற்பகல் 2 மணிக்கு வாரணாசியை சென்றடையும். வாரணாசியில் இருந்து இரண்டரை மணிக்கு புறப்பட்டு மீண்டும் டெல்லிக்கு இரவு 10.30 மணிக்குத் திரும்பி வரும். முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள இந்த ரயிலில் 2 சொகுசு பெட்டிகள் உள்பட16 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.



சொகுசு பெட்டியில் 58 இருக்கைகளும், சாதாரண பெட்டியில் 78 இருக்கைகளும் இருக்கும். வை-பை, நவீன கழிவறை, தானியங்கி கதவுகள், ஜிபிஎஸ் மூலம் ரயிலின் பயணம் குறித்த தகவல்கள், ரப்பர் விரிப்புத் தரைகள், சுழல் நாற்காலிகள் என இதுவரை ரயில்களில் இல்லாத பலவகையான வசதிகள் இதில் இடம்பெறும். சென்னை ஐசிஎப்பில் 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த ரயிலில் என்ஜின் கிடையாது. அதற்குப் பதில் புதிய தொழில்நுட்பத்தில் ரயில்பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.அதன்படி ஒவ்வொரு பெட்டியிலும் மோட்டார் இருப்பதால் என்ஜின் போன்று செயல்படும்.



18 மாதங்களில் வடிவமைத்து தயாரிக்கப்பட்டுள்ளதால் இந்த ரயில் டிரெயின் 18 என அழைக்கப்படுகிறது. நாட்டின் அதிவேக ரயிலான சதாப்தி எக்ஸ்பிரஸ்க்கு மாற்றாக இந்த டிரெயின் 18 இருக்கும். சதாப்தி தொடர் வண்டி முக்கியமான பெருநகரங்களை மற்ற சுற்றுலா, தொழில் மற்றும் புனிதயாத்திரை ஆகியவற்றோடு தொடர்புடைய சிறு நகரங்களை இணைக்கும் தொடர் வண்டி. இந்தியாவின் வேகமான தொடர் வண்டிகளில் சதாப்தியும் அடங்கும். இவ்வண்டியை இந்திய இரயில்வே பெருமைமிக்கதாகக் கருதுகிறது. சதாப்தி விரைவு வண்டி குறைந்த தூரத்தில் இருந்து நடுத்தர தூரம் வரை உள்ள வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இந்த வகை வண்டியின் சராசரி வேகம் ஒரு மணிநேரத்திற்கு 140 கி.மீ ஆகும். ஆனால் போபால் சதாப்தி 160 km/h வரை செல்லக் கூடியது. எனவே போபால் சதாப்தியே இந்தியாவின் வேகமான சதாப்தி தொடர் வண்டியாக இருந்து வந்தது. தற்போது இதன் சாதனையை ட்ரெய்ன்-18 முறியடிக்க உள்ளது.

Next Story