Top
undefined
Begin typing your search above and press return to search.

ஊழல் செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் - வி.ஐ.டி. துணை வேந்தர் விஸ்வநாதன் பேச்சு

ஊழல் செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் - வி.ஐ.டி. துணை வேந்தர் விஸ்வநாதன் பேச்சு

SG SuryahBy : SG Suryah

  |  30 Dec 2018 8:04 AM GMT

நம் நாட்டின் முன்னேற்றத்தை தடுப்பது ஊழல்தான் என்றும், ஊழல் செய்தவர்களை சீனாவில் தண்டிப்பதுபோல கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் வி.ஐ.டி துணை வேந்தர் விஸ்வநாதன் கூறினார்.
வேலூர் வி.ஐ.டி பல்கலையில் நடைபெற்ற இந்திய பொருளாதார சங்கத்தின் 3 நாள் தேசிய மாநாடு சனிக்கிழமை நிறைவடைந்தது. நிறைவு விழாவில், பொருளாதாரப் பேராசிரியர்கள் எழுதிய 7 ஆங்கில நூல்களை இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில் "நாட்டில் சமூக மேம்பாட்டுடன் கூடிய பொருளாதார வளர்ச்சியே சிறந்தது. அத்தகைய வளர்ச்சி என்பது வறுமையைக் குறைப்பது, நல்ல சூழலை உருவாக்குவது, வளர்ச்சியில் எல்லோரையும் இணைத்துக் கொள்வதாக இருக்க வேண்டும்". தனிநபர் வருவாய் விகிதம் 1950 முதல் 1970 வரை 1.3 சதவீதம். இப்போது அது, 7.9 சதவீதமாக உள்ளது என்றார்.
மாநாட்டு தலைவரும் வி.ஐ.டி வேந்தருமான ஜி.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசியது: இந்தியாவை வளர்ந்த நாடாக்க கடந்த 70 ஆண்டுகளாக முயற்சித்து வருகிறோம். இது நடக்கக் கூடியதுதான். அதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அரசியல்வாதிகள், அதிகாரிகள், மக்கள் இணைந்து முயற்சித்தால் அதைத் சாதிக்க முடியும். ஆசிய கண்டத்தில் 60 நாடுகள் உள்ளன. இதில், ஊழல் அதிகமுள்ள நாடுகள் குறித்த கணக்கெடுப்பில் இந்தியாவின் ஊழல் அளவு 69 சதவீதமாக உள்ளது. அதேசமயம், ஜப்பானில் ஊழலின் அளவு அரை சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. இதுவே அந்த நாடு உலகில் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக மாறியிருப்பதற்கு முக்கிய காரணமாகும். இதேபோல், சீனாவில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நபர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் அந்த நாட்டில் 15 லட்சம் அரசு ஊழியர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக தண்டிக்கப்பட்டுள்ளனர். அந்த நாட்டின் பிரதமரே ஊழல் குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டார்.
ஊழலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். பொருளாதார நிபுணர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாணக் கூடியவர்கள். அவர்கள் வேளாண்மை, தொழில்துறை, வேலை வாய்ப்பு ஆகியவற்றின் நிலையான வளர்ச்சிக்கு வழி காண வேண்டும் என்றார்.
Next Story