Top
undefined
Begin typing your search above and press return to search.

₹38,850 கோடி திரட்டி சாதனை - அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தை பிடித்த இந்தியா!

₹38,850 கோடி திரட்டி சாதனை - அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தை பிடித்த இந்தியா!

SG SuryahBy : SG Suryah

  |  31 Dec 2018 11:04 AM GMT

இந்திய பங்குச் சந்தைகள், புதிய பங்கு வெளியீடுகள் மூலம், ₹38 ஆயிரத்து 850 கோடி திரட்டியுள்ளன. இதன் மூலம், அதிக தொகை திரட்டி, சர்வதேச பங்குச் சந்தைகளில், அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்திய சந்தைகளில் சில ஏற்ற - இறக்கம் இருந்தாலும் பொருளாதாரம் ஸ்திரமாகவே உள்ளது.


இந்தாண்டு, இந்திய பங்குச் சந்தைகள், 161 புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 38 ஆயிரத்து, ₹850 கோடி ரூபாய் திரட்டி, இரண்டாவது இடத்தை பிடித்து உள்ளன.அமெரிக்கா, 261 புதிய பங்கு வெளியீடுகள் மூலம், ₹42 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டி, முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டு உள்ளது. கச்சா எண்ணெய் விலையேற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு, வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பணநெருக்கடி போன்ற பிரச்னைகளின் தாக்கத்தை, இந்திய பங்குச் சந்தை கள் இந்தாண்டு சந்தித்தன. இந்த நிலையிலும், முதல் அரையாண்டில் நிலவிய சாதகமான சூழல் காரணமாக, புதிய பங்கு வெளியீடுகள் அதிகரித்து உள்ளன.



சீன பங்குச்சந்தை குறியீடுகள் 2018-ஆம் ஆண்டுச் சரிந்துள்ளன. அதே நேரம் இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 6 சதவீதம் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story