Top
undefined
Begin typing your search above and press return to search.

பிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை... மீண்டும் பிடிப்போம் ‘மஞ்சப்பை’ ! புத்தாண்டை ( 2019 ) பசுமை கம்பளத்துடன் வரவேற்போம் !

பிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை... மீண்டும் பிடிப்போம் ‘மஞ்சப்பை’ ! புத்தாண்டை ( 2019 ) பசுமை கம்பளத்துடன் வரவேற்போம் !

SG SuryahBy : SG Suryah

  |  31 Dec 2018 11:57 AM GMT

நாளைமுதல் பிளாஸ்டிக் பைகள் உட்பட 14 வகையான பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மீண்டும் நாம் சுற்றுச் சூழலுக்கு உகந்த துணிப்பைகள் உட்பட பல இயற்கை பொருள்களை பயன்படுத்த வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
பிளாஸ்டிக் குப்பைகளின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் பெருகி வருவதாலும் இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு  மற்றும் சுகாதாரக் கேடு ஏற்படுவதாலும் இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம் உட்பட 25 மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாடு அரசும் நாளை ஆங்கிலப் புத்தாண்டு முதல் இவற்றை தடை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உததரவை அடுத்து, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை, தமிழகமெங்கும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. தடையை மீறிப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க, தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் யாரேனும் வைத்திருந்தால், வார்டு அலுவலகங்களில் மாலைக்குள் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நாளை முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ, சேமித்து வைத்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அவற்றை பறிமுதல் செய்ய சென்னை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகள் திட்டமிட்டுள்ளன.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விவரம் : 
1. உணவுப் பொருட்கள் கட்டும் பிளாஸ்டிக் தாள்,
2. பிளாஸ்டிக் தெர்மாக்கோல் தட்டுகள்
3. பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதக் குவளைகள்
4. பிளாஸ்டிக் குவளைகள்
5. நீர் நிரப்பப் பயன்படும் பைகள்
6. நீர் நிரப்பப் பயன்படும் பொட்டலங்கள்
7. பிளாஸ்டிக் தூக்குப் பைகள்
8. பிளாஸ்டிக் கொடிகள்
9. பிளாஸ்டிக் விரிப்புகள்
10. பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள்
11. பிளாஸ்டிக் தேனீர் குவளைகள்
12. பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள்
13. பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள்
14. நெய்யாத பிளாஸ்டிக் பைகள்
பிளாஸ்டிக்கு பதிலாக பரிந்துரைக்கப்படும் மாற்றுப் பொருட்கள்:

  1. வாழையிலை                                                                                                          2. பாக்கு மர இலை
    3. அலுமினியத் தாள்
    4. காகிதச் சுருள்
    5. தாமரை இலை
    6. கண்ணாடி / உலோக குவளைகள்
    7. மூங்கில் / மரப் பொருட்கள்
    8. காகிதக் குழல்கள்
    9. துணி / காகிதம் / சணல் பைகள்
    10. காகிதம் / துணிக் கொடிகள்
    11. பீங்கான் பாத்திரங்கள்
    12. மண் கரண்டிகள்
    13. மண் குவளைகள் போன்றவைகளை பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்களாக பயன்படுத்தலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது. எனவே சுற்றுச் சூழலை மேம்படுத்தும் வகையில் 2019 ஆம் ஆண்டை பசுமை உள்ளத்துடன் வரவேற்போம்

Next Story