Top
undefined
Begin typing your search above and press return to search.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு 24 மணி நேரத்தில் தீர்வு: தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அதிரடி #NCPCR

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு 24 மணி நேரத்தில் தீர்வு: தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அதிரடி #NCPCR

SG SuryahBy : SG Suryah

  |  31 Dec 2018 1:58 PM GMT

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குழந்தைகள் மீதான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க, Quick Response Cell (QRC) என்று ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புகார் அளிக்கப்பட்ட 24 மணிநேரத்தில் குழந்தைகள் மீதான குற்றங்களின் மீது தீர்வு காணப்படும்.
NCPCR
என்ற இணையதளத்தின் மூலம் குழந்தைகள் மீதான குற்றங்கள் மீது புகார் அளிக்க வேண்டும். QRC என்ற இந்த தனிக்குழுவில் ஆறு பிரிவுகள் உள்ளன. அவை,
Child Health (குழந்தை சுகாதாரம்)
Child Labour (குழந்தை தொழில்)
Loss related to Children (குழந்தைகள் தொடர்பான இழப்பு)
Child Education (குழந்தை கல்வி)
Right to Education (கல்வி உரிமை)
Child Psychology and Sociology (குழந்தை உளவியல் மற்றும் சமூகவியல்)
உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் தான் இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த சேவை துவங்கப்பட்ட ஒரு மாத காலத்திற்குள் இந்தியா முழுவதிலும் இருந்து 100 புகார்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து வந்த 2 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது", என்று தெரிவித்தார்.
https://youtu.be/57e6FFT9-AI
Next Story