Top
undefined
Begin typing your search above and press return to search.

கடந்த நான்காண்டுகளில், விவசாயத்திற்கான கடன் மட்டும் ₹11 லட்சம் கோடி : வேளாண்துறை தகவல்

கடந்த நான்காண்டுகளில், விவசாயத்திற்கான கடன் மட்டும் ₹11 லட்சம் கோடி : வேளாண்துறை தகவல்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  1 Jan 2019 6:06 PM GMT

கடந்த நான்காண்டுகளில், விவசாயத்திற்கான கடன் வழங்குவது 57 சதவீதம் உயர்ந்து, ₹11 லட்சம் கோடி அளவை எட்டியதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வட்டி மானியமும் ஒன்றரை சதவீதம் உயர்ந்து, ₹15 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
விவசாயிகள், குறிப்பாக சிறு விவசாயிகள் நலன்கருதி, மத்திய அரசு வேளாண் கொள்கையை வகுத்து செயல்படுத்தி வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதற்காக நாடெங்கிலும் 546 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு உதவ, கூட்டு கடன்வசதிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ₹27 லட்சம் வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும், 24 பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உற்பத்தி செலவில் ஒன்றரை மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Inputs from AIR News
Next Story