Top
undefined
Begin typing your search above and press return to search.

பொதுமக்கள் நலனுக்கான 4ஜி சேவை: பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் செலவில் பாதியை ஏற்க மோடி சர்க்கார் முடிவு

பொதுமக்கள் நலனுக்கான 4ஜி சேவை: பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் செலவில் பாதியை ஏற்க மோடி சர்க்கார் முடிவு

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  1 Jan 2019 5:14 AM GMT

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 5ஜி சேவையை தொடங்கும் பணிகளில் ஆயத்தமாகி வருகின்றன. அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் இன்னும் 3ஜி சேவையை மட்டுமே வழங்கி வருகிறது. இதனால், தொலை தொடர்பு சேவைகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை எளிதாக கவர்ந்து செல்கின்றன.
இந்நிலையில், 4ஜி சேவையை பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கான பெரும் தொகையை அந்நிறுவனத்தால் தனியாக செலுத்த முடியாது என்பதால், பாதித்தொகையை மத்திய அரசு பொது மக்களின் நலனுக்காக ஏற்க இருக்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் மக்கள் அதிக அளவில் பி.எஸ்.என்.எல் சேவையை பயன்படுத்தி வருவதால் அவர்களுக்கு சிறந்த சேவையை அளிக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது.
2010-ஆம் ஆண்டு தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ஏதுவாக காங்கிரஸ் அரசாங்கம் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி சேவை வேண்டாம் என்று கேபினட் ஒப்புதலுடன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த அலைக்கற்றை திருப்பி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story