Top
undefined
Begin typing your search above and press return to search.

புத்தாண்டு மகிழ்ச்சியுடன் ஒரு கூடுதல் மகிழ்ச்சி: மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ₹5.91, மானியமில்லாத சிலிண்டர் விலை ₹120.50 குறைந்தது

புத்தாண்டு மகிழ்ச்சியுடன் ஒரு கூடுதல் மகிழ்ச்சி: மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ₹5.91, மானியமில்லாத சிலிண்டர் விலை ₹120.50 குறைந்தது

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  1 Jan 2019 5:07 AM GMT

சமையல் எரிவாய் நிறுவனங்கள் விலையை உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன. இந்நிலையில் சிலிண்டர் விலை ₹5 ரூபாய் 91 காசுகள் குறைக்கப்படுவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. அதுபோல 14.2 கிலோ எடை கொண்ட மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் தற்போதைய விலை ₹120 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது டிசம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது குறைப்பு ஆகும். ஏற்கனவே டிசம்பர் 1-ஆம் தேதி மானிய விலை சமையல் எரிவாயு ₹6.52 குறைக்கப்பட்டது. ஜூன் மாதத்திலிருந்து தொடர்ந்து ஆறு மாத மாத உயர்வு ஏற்பட்டதற்குப் பிறகு  அந்த விலைக் குறைப்பு அமலுக்கு வந்தது.
சர்வதேச சந்தையில் எல்.பி.ஜி விலை குறைந்ததால், அமெரிக்க டாலரின் மதிப்புக்கு ஏற்ப இந்திய ரூபாய் பரிமாற்ற விகிதம் குறைந்ததை அடுத்து  மானியம் அற்ற சிலிண்டர் ஒன்றுக்கு ₹120.50 குறைக்கப்படுகிறது. டெல்லியில் 14.2 கிலோ கொண்ட சிலிண்டர் ஒன்றுக்கு ₹689 செலவாகும். டிசம்பர் 1 அன்று, மானியமில்லாத எல்பிஜியின் விலை சிலிண்டர் ஒன்றுக்கு ₹133 குறைக்கப்பட்டது. அனைத்து எல்பிஜி நுகர்வோரும் சந்தை விலையில் எரிபொருள் வாங்க வேண்டும் என்றாலும் அரசாங்கம் ஒரு வருடத்தில் 14.2 கிலோ எடையுள்ள 12 சிலிண்டர்களுக்கு மட்டும் மானியத் தொகையை நேரடியாக பொதுமக்களுக்கு வங்கி கணக்குகளில் வழங்குகிறது.
சராசரியான சர்வதேச அளவிலான எல்.பி.ஜி விலை விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அந்நிய செலாவணி விகிதத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து, இந்த மானியத் தொகை மாறுபடும். சர்வதேச விகிதங்கள் உயரும் போது, அரசாங்கம் அதிக மானியத்தை வழங்குகிறது. குறையும்போது மானியம் குறைக்கப்படுகிறது. சமையல் எரிவாயு நுகர்வோர் ஜனவரி மாதம் தங்கள் வங்கி கணக்குகளில் சிலிண்டர் ஒன்றுக்கு மானியம் ₹194.01 பெறுவார்கள். நவம்பர் மாதம் ₹433.66 வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் மானியம் செலுத்தப்பட்டது. இது டிசம்பர் மாதத்தில் ₹308.60 ரூபாயாக குறைந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.
Next Story