Top
undefined
Begin typing your search above and press return to search.

மோடி சர்க்காரின் ஜி.எஸ்.டி வரி சீரமைப்பு எதிரொலி : சினிமா டிக்கெட், டிவி உட்பட 23 பொருட்களுக்கான விலை இன்று முதல் முதல் குறைகிறது

மோடி சர்க்காரின் ஜி.எஸ்.டி வரி சீரமைப்பு எதிரொலி : சினிமா டிக்கெட், டிவி உட்பட 23 பொருட்களுக்கான விலை இன்று முதல் முதல் குறைகிறது

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  1 Jan 2019 7:09 AM GMT

ஜி.எஸ்.டி வரி விகித சீரமைப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, தொலைக்காட்சி பெட்டி, கணினி திரை, சினிமா டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட 23 பொருள்கள் மற்றும் சேவைகளின் விலை இன்று(ஜனவரி -1) முதல் குறைகிறது.
டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், வரி விகிதத்தில் பல்வேறு சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. அதாவது, சினிமா டிக்கெட் கட்டணம், தொலைக்காட்சி பெட்டி, கணினி திரை, பவர் பேங்க் உள்ளிட்ட 23 பொருள்கள் மற்றும் சேவைகள் மீதான வரி குறைக்கப்பட்டது. அதிகப்பட்சமாக விதிக்கப்படும் 28 சதவீத வரி விகிதத்துக்குள், ஆடம்பர பொருள்கள், உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பொருள்கள், சிமெண்ட், பெரிய திரை தொலைக்காட்சி பெட்டி, ஏசி, பாத்திரம் கழுவும் இயந்திரம் ஆகியவை மட்டும் இருக்கும்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. பதப்படுத்தப்பட்ட காய்கறிகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது.
டிஜிட்டல் கேமரா, விடியோ கேமரா ரெக்கார்டர், கியர் பாக்ஸ், பயன்படுத்தப்பட்ட டயர்கள் உள்ளிட்டவை மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளின் வாகன பொருள்கள் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. சரக்கு வாகன 3ஆம் நபர் காப்பீட்டுத் தொகை மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டது. ரூ.100 வரையிலான சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், ரூ.100க்கும் கூடுதலாக இருக்கும் சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.
32 அங்குலம் வரை கொண்ட தொலைக்காட்சி பெட்டி, கணினி திரை, பவர் பேங்க் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த வரி சீரமைப்பு குறித்த ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவை, நாட்டு மக்களுக்கு புத்தாண்டு பரிசாக அளிக்கும் வகையில், மத்திய அரசு அறிவிக்கையாக வெளியிட்டுள்ளது. இதன்படி, மேற்கண்ட பொருள்கள், சேவைகள் அனைத்தும் இன்று முதல் விலை குறைகின்றன.
Next Story