Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்திய - ரஷ்ய பேச்சுவார்த்தைகள் துடிப்புடன் முன்னேறி வருகின்றன : ரஷ்ய அதிபர் புடின்

இந்திய - ரஷ்ய பேச்சுவார்த்தைகள் துடிப்புடன் முன்னேறி வருகின்றன : ரஷ்ய அதிபர் புடின்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  1 Jan 2019 5:41 PM GMT

புத்தாண்டையொட்டி, குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் திரு நரேந்திர மோதி ஆகியோருக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்திய, ரஷ்ய பேச்சுவார்த்தைகள் துடிப்புடன் முன்னேறி வருகின்றன என்று ரஷ்ய அதிபர் புடின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் இருநாடுகளுக்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்குமிடையிலான சிறப்பு செயலுத்திக் கூட்டாளித்துவம் மேலும் வலுவடைந்திருப்பதாக புடின் அவர்கள் தெரிவித்துள்ளதாக, ரஷ்ய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இரு நாடுகளும் மேற்கொண்டுவரும் முயற்சிகளின் பயனாக, பல துறைகளில் பரஸ்பரம் கூட்டுறவு வலுப்படும் என்றும், ஐ.நா., பிரிக்ஸ், ஷாங்காய் கூட்டுறவு ஒத்துழைப்பு, ஜி-20 போன்ற பலதரப்பட்ட சர்வதேச மேடைகளில் இருநாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படும் என்றும் ரஷிய அதிபர் தெரிவித்துள்ளதாக அக்குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.
Inputs from AIR News
Next Story