Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐயப்பன் கோவில் விவகாரம் கோவில் நியதி தொடர்புடையது, முத்தலாக் விவகாரம் சமூக நீதி தொடர்புடையது : பிரதமர் மோடி விளக்கம்

ஐயப்பன் கோவில் விவகாரம் கோவில் நியதி தொடர்புடையது, முத்தலாக் விவகாரம் சமூக நீதி தொடர்புடையது : பிரதமர் மோடி விளக்கம்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  2 Jan 2019 6:16 PM GMT

பிரதமர் மோடி நேற்று முன்தினம் ஏ.என்.ஐ. செய்து நிறுவனத்துக்கு புத்தாண்டையொட்டி சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சர்ச்சைக்குரிய , முக்கியத்துவம் வாய்ந்த பல விவகாரங்கள் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டது. இராமர் கோவில் விவகாரம், ரூபாய் மதிப்பு மாற்ற விவகாரம், சர்ஜிக்கல் நடவடிக்கை, உர்ஜித்படேல் ராஜினாமா விவகாரம், 2019 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி உள்ளிட்டவை குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் விரிவாக மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார் பிரதமர் மோடி. அப்போது சபரிமலை விவகாரம் மதம் சார்ந்த விவகாரம் என்றும் இதில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என கூறுகிறீர்கள். அதே சமயம் முத்தலாக் விவகாரமும் இஸ்லாமிய மத விவகாரம் தான். அதில் ஏன் மத்திய அரசு தலையிட வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டது.


இந்த கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளிக்கையில் “இஸ்லாமிய சகோதரிகளை முத்தலாக் கூறுவதன் மூலம் திருமண முறிவை ஏற்படுத்தும் முறையை பல இஸ்லாமிய நாடுகள் தடை செய்துள்ளன. முத்தலாக் முறை பாலின பாகுபாடுகளுக்கு இடம் அளிப்பதாலும், சமூக நீதிக்கு எதிராக இருப்பதாலும் இந்த முறைக்கு தடை விதிக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே முத்தலாக் விவகாரம் மத சம்பிரதாய, மத நம்பிகை  விஷயம்  இல்லை. ஆனால் ஐயப்பன் கோவில் விவகாரம் ஒரு கோவிலின் நம்பிக்கை மற்றும் பாரம்பரியம் தொடர்பான விவகாரம். ஏனெனில் இந்தியாவில் சில கோவில்களில் நுழைய ஆண்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு கோவிலுக்கும் உள்ள தனி விதியாகும் என்றார். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ராவின் தீர்ப்பை கவனமாக வாசிப்பது அவசியமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Next Story