Top
undefined
Begin typing your search above and press return to search.

அனைவரையும் சென்றடையும் ஆதார் அட்டைகள் : இதுவரை 123 கோடி பேருக்கு வழங்கியுள்ளதாக மோடி சர்க்கார் பெருமிதம்

அனைவரையும் சென்றடையும் ஆதார் அட்டைகள் : இதுவரை 123 கோடி பேருக்கு வழங்கியுள்ளதாக மோடி சர்க்கார் பெருமிதம்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  2 Jan 2019 6:49 PM GMT




பலவித பயன்களையும் உள்ளடக்கிய ஆதார் அட்டைகள் அளிக்கும் திட்டம் முந்தைய காங்கிரஸ் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவர்களால் இத்திட்டத்தை விரைவு படுத்த முடியவில்லை. இந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பதவி ஏற்றதும் ஆதார் அட்டைகள் வழங்கும் திட்டம் விரைவாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக இது வரை 123 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தகவல் அளித்துள்ளார்.


மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் மாநிலங்களவையில் அளித்துள்ள பதிலில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை 121,08,54,977 ஆகும். நவம்பர் 30, 2018 வரையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) 122.90 கோடி ஆதார் கார்டுகளை வழங்கியுள்ளது.
5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு 6.71 கோடி ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. 5 வயது முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு 29.02 கோடி கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.  2011-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி ஒரு வருடத்திற்குள் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 2,08,98,228 ஆகும்.
எஸ்.ஆர்.எஸ் (மாதிரி பதிவு அமைப்பு) சமீபத்திய தகவல்கள் படி 2016-ம் ஆண்டிற்கான பிறப்பு விகிதம் 20.4 ஆகவும், இறப்பு விகிதம் 6.4 ஆகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்ஆர்எஸ், நாடெங்கிலும் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்கள் மற்றும் நகர்ப்புறத் தொகுதிகள் அடிப்படையில் தொடர்ச்சியான ஆய்வு பணியை மேற்கொள்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கும் ஆதார் அடையாள அட்டை உடனுக்குடன் வழங்கப்படுவதால் கிட்டத்தட்ட அனைவருக்குமே அட்டைகள் கிடைத்துவிட்டது. இனி பிறக்கப் போகும் குழந்தைகள் மட்டுமே ஆதாரை பெறும் பாக்கியத்தை பெறவுள்ளது எனலாம்.



Next Story